
தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் முன்னணி நடிகையாக இருந்து, தற்போது இந்திப்படங்களில் நடித்து வரும் திரிஷா, விரைவில் திருமதியாகப் போகிறார். அவருக்குத் திருமண ஏற்பாடுகள் மறைமுகமாக நடக்கின்றன.
திரிஷா தற்போது “காட்டா மீட்டா என்ற இந்திப்படத்தில் நடித்து வருகிறார். கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் கமல் ஜோடியாக ஒரு படத்தில் நடிக்கிறார். இப்படங்கள் முடிந்ததும் திருமணத்தை நடத்த முடிவு செய்துள்ளனர். அதற்கு முன்னால் மாப்பிள்ளையை நிச்சயம் செய்து விட திரிஷாவின் அம்மா உமா கிருஷ்ணன் முனைப்பாக இருக்கிறார். இதற்காக திரிஷாவின் ஜாதகத்தை நெருக்கமானவர்களிடம் கொடுத்து, பொருத்தமான வரன் பார்த்து வருகிறார்.
ஆனால் திரிஷாவிடம் இருந்து திருமணத்துக்குச் சாதகமான பதில் இன்னும் வரவில்லையாம். இன்னும் சில ஆண்டுகள் போகட்டும் என்று தாயிடம் கூறிவரும் திரிஷா, இரண்டு மனதாகச் சம்மதம் தெறிவித்துள்ளாராம். தகுதியானவரை கண்டுபிடிக்கும் போது திருமணத்தை வைத்துக்கொள்ளலாம் என்று பேசுகிறாராம். ஆனால் தாயார் சம்மதிக்கவில்லை. வரன் தேடுவதில் தீவிரமாக இருக்கிறார்.
திரிஷா, 1999ஆம் ஆண்டு ‘லேசா லேசா’ படம் மூலம் தமிழில் அறிமுகமானார். ‘சாமி’, ‘கில்லி’, ‘திருப்பாச்சி’, ‘உனக்கும் எனக்கும்’ என பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். தெலுங்குப்பட உலகில் சம்பளத்தொகையை ரூ.1 கோடி அளவுக்கு உயர்த்திய முதல் தென்னிந்திய நடிகை திரிஷா, என்கின்றனர்.
0 comments:
Post a Comment