
நிரந்தரமாக வீட்டிலேயே போலீஸ் டிரஸ் தைத்து வைத்திருப்பார் போலிருக்கிறது. இந்த படத்திலும் அர்ஜுனின் வேடம் போலீஸ் அதிகாரிதான். தன்னுடன் பலமான காமெடியர்களை வைத்துக் கொள்வது அவரது வெற்றி பார்முலா. இந்த படத்தில் வடிவேலு, விவேக்குக்கு பதிலாக இவர் செலக்ட் செய்திருப்பது மயில்சாமியை. (நல்ல முடிவு)அப்படியே வானத்தை நோக்கி கைகளை நீட்டி, எனர்ஜியை உள்வாங்கி எதிரிகளை பந்தாடும் அர்ஜுனை எத்தனை படங்களில் பார்த்திருப்போம்? மாசி படத்தில் ஃபைட் உண்டு. ஆனால் இதுபோன்ற பில்டப் இல்லை. ஒரு மாறுபட்ட அர்ஜுனை பார்க்கலாம் என்கிறார்கள் இப்படக்குழுவினர்.
இயக்குனரே வெட்கப்படுகிற அளவுக்கு பாராட்டி தள்ளுகிற ஹீரோக்கள் வரிசையில் இனி அர்ஜுனையும் சேர்த்துக் கொள்ளலாம் போலிருக்கிறது. இப்படத்தின் இயக்குனர் ஜி.கிச்சா பற்றி அவர் சொல்வது என்ன தெரியுமா? அதை அவர் வாயாலேயே கேளுங்கள். “மாசி படத்தில் நடிப்பது எனக்கு பிரஷ்ஷான உணர்வை தந்திருக்கு. நான் இதுவரைக்கும் 90 இயக்குனர்களுடன் வொர்க் பண்ணியிருக்கேன். 140 படத்திலே நடிச்சிருக்கேன். ஆனால் இந்த படத்தின் டைரக்டர் கிச்சாவுடன் வொர்க் பண்ணியது டிபரண்ட் எக்ஸ்பீரியன்ஸ். எந்த சீனுக்கு என்ன டயலாக் என்பதை சீன் பேப்பரை பார்க்காமலே சொல்லிடுவார். அவருடைய டெடிக்கேஷன் ரொம்ப ஆச்சர்யமானது.”
ரிலீசுக்கு பிறகும் இதையே திருப்பி சொல்லணும்…!
0 comments:
Post a Comment