
காக்க காக்க, வேட்டையாடு விளையாடு உள்ளிட்ட வெற்றிப்படங்களை இயக்கிய டைரக்டர் கவுதம் மேனன் அடுத்து இயக்கவுள்ள படத்தில் அஜித் நடிக்கிறார். வழக்கம்போல இந்த படமும் போலீஸ் கதையை மையமாக வைத்ததுதானாம். அசல் படத்தில் நடித்து முடித்து விட்ட அஜித் தனது அடுத்த பட வேலைகளில் பிஸியாகி விட்டார். கவுதம் மேனன் இயக்கவுள்ள புதிய படத்தில் அஜித் நடிக்கவிருக்கிறாராம். படத்தில் அஜித் போலீசாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நடிக்கும் நடிகை மற்றும் நட்சத்திரங்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம் இன்னமும் வெளியிடப்படவில்லை. விரைவில் புதிய படத்துக்கான அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும்.
0 comments:
Post a Comment