Wednesday, January 13, 2010

செம்மொழி மாநாட்டு பாடல்! ஷங்கர்-ரஹ்மான் உருவாக்கம்


செம்மொழி மாநாட்டு பாடல்!  ஷங்கர்-ரஹ்மான் உருவாக்கம்


பல்வேறு விவாதங்களுக்கு பிறகு இதற்கு ஒப்புதல் அளித்துவிட்டார் முதல்வர். எல்லாகோவையில் தமிழக அரசின் சார்பாக செம்மொழி மாநாடு நடைபெறுகிறதல்லவா? இந்த மாநாட்டில் ‘வந்தே மாதரம்’ ஸ்டைலில் ஒரு பாடலை உருவாக்க திட்டமிட்டாராம் சன் டி.வி அதிபர் கலாநிதி மாறன். இந்த திட்டத்தை முதல்வர் கலைஞரின் கவனத்திற்கு கொண்டு சென்றாராம்.

விழாக்களிலும் நீராரும் கடலுடுத்த பாடல்தான் முதலில் ஒலிக்கும். இந்த பாடல் இசையாக வெளிவர பெரிதும் காரணமாக இருந்ததும் அன்றைய முதல்வராக இருந்த கருணாநிதிதான். இதை போலவே இன்னொரு பாடலும் உருவாக்கப்பட்டால் அது செம்மொழி மாநாட்டுக்கு பெருமை சேர்க்கும் என்று நம்பிய அவர், இதற்காக ஒரு பாடலை எழுதி தரவும் சம்மதித்திருக்கிறாராம்.

shankar

ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். இதை காட்சிப்படுத்த இசைந்திருக்கிறார் இயக்குனர் ஷங்கர். மாநாட்டு நேரத்தில் எல்லா சேனல்களிலும், வானொலி மற்றும் ஊடகங்களிலும் இந்த பாடல் ஒளிபரப்பப்படும். ஷங்கரின் பிரமாண்டங்களுக்கு ஏற்றார் போல நிதி ஒதுக்க முன் வந்திருக்கிறதாம் அரசு!


0 comments:

Post a Comment