ஜாதக கட்டத்தை பார்த்துதான் சாதகமான திட்டத்தையே வகுப்பார் அஜீத். நின்றால் ராகுகாலம், நிமிர்ந்தால் எமகண்டம் என்று எல்லாவற்றும் ஜாதகம் பார்ப்பதில் இவர் இன்னொரு ராஜேந்தர். |
இப்படியெல்லாம் நேரம் பார்க்கும் இவர், தனது பட்டப்பெயரையே “பரவாயில்ல...விட்டு தள்ளு” என்ற முடிவுக்கு வந்திருக்கிறாராம். அப்படியென்றால்? வேறொன்றுமில்லை... சென்ட்டிமென்ட்தான்!
இந்த நேரத்தில்தான் தனது ‘அல்டிமேட் ஸ்டார்’ பட்டத்தை யாரும் பயன்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார் அவர். இப்படி போட துவங்கிய பின்புதான் ஹிட்டுகள் அரிதாகி போனதாக சொல்லப்பட்டதாம் அவரிடம். இதையெல்லாம் கருத்தில் கொண்ட அவர், அசல் படத்தின் டைட்டிலில் வெறும் அஜீத்குமார் என்று மட்டும் போட சொல்லியிருக்கிறாராம். அசல் படத்தை பாராட்டி அடிக்கப்படும் போஸ்டர்களிலும் இனி அஜீத் பெயர் மட்டும்தான் இருக்குமாம். |
தனக்கு தமிழகம் முழுவதும் இருக்கிற 46 ஆயிரம் மன்றங்களை ஒருங்கிணைக்கும் வேலைகளில் தனது அலுவலக ஊழியர்களை முடுக்கி விட்டிருக்கிறார் அஜீத். இந்த மன்றங்கள் எப்போது தொடங்கப்பட்டன? இப்போதும் அவை செயல்படுகின்றனவா? ஒவ்வொரு மன்றத்திலும் எத்தனை பேர் இருக்கிறார்கள்? போன்ற முக்கியமான கேள்விகளுடன் மன்றத்தை புதுப்பித்து வருகிறார்கள் இந்த ஊழியர்கள்.
0 comments:
Post a Comment