Wednesday, January 13, 2010

ஷில்பா ஷெட்டிக்கு திருமண விருந்து கொடுத்தார் பிரிட்டிஷ் எம்.பி.


ஷில்பா ஷெட்டிக்கு திருமண விருந்து கொடுத்தார் பிரிட்டிஷ் எம்.பி.,


நடிகை ஷில்பா ஷெட்டிக்கும் அவரது கணவர் ராஜ் குந்ராவுக்கும் பிரிட்டிஷ் எம்.பி., கேத் வாஸ் திருமண விருந்து கொடுத்துள்ளார். ஷில்பா ஷெட்டி என்றாலே சென்ஷேனல் நடிகை என்ற அடைமொழியும் தொற்றிக் கொள்ளும். பிக் பாசில் ஆரம்பித்து இன்று வரை அவர் பிரபலம் தான். திருமணம் முடிந்த கையோடு வெளிநாடுகளில் தேன்நிலவு கொண்டாட புறப்பட்டார் ஷில்பா. தற்போது லண்டனில் இருக்கும் அவருக்கு, பிரிட்டிஷ் எம்.பி.., கொடுத்துள்ள விருந்து பரபரப்பாக பேசப்படுகிறது. இந்த விருந்து குறித்து ஷில்பா கூறுகையில் : கேத் வாஸ் தனது சிறந்த நண்பர் என தெரிவித்தார். மேலும் திருமண வாழக்கையை மிகவும் ரசித்து அனுபவிப்பதாகவும், இவ்வளவு சுவாரஸ்யமாக திருமண வாழ்க்கை இருக்கும் என முன்பே தெரிந்திருந்தால், திருமணத்தை முன்னரே முடித்திருப்பேன் என்றார்

0 comments:

Post a Comment