Wednesday, January 13, 2010

சினிமாதான் எனக்கு கடவுள் : சரோஜா தேவி

சினிமாதான் எனக்கு கடவுள் என்று பழம்பெரும் நடிகை சரோஜாதேவி கூறியுள்ளார். பெங்களூருவில் கர்நாடக கலாஷேத்ரா அகாடமி சார்பில் நடிகை சரோஜாதேவிக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது.

விழாவில் கலந்து கொண்ட சரோஜாதேவி, பாராட்டுக்கு நன்றி தெரிவித்து பேசினார். அப்போது அவர், சினிமாதான் எனக்கு கடவுள். தொடர்ந்து நான் சினிமாவில் நடித்துக் கொண்டிருப்பேன், என்றார்.

மேலும் அவர் பேசுகையில்,

நான் நடிக்க தொடங்கிய காலத்தில் சிபாரிசு எதுவும் கிடையாது. திறமை உள்ளவர்களுக்கு மட்டுமே நடிக்க வாய்ப்பு கிடைக்கும். அதுபோலதான் எனக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்த நேரத்தில் எனக்கு வாய்ப்பு கொடுத்தவர்களுக்கும், திரைப்படத்துறையை சேர்ந்த அனைத்து பிரிவினருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன், என்றார்.

0 comments:

Post a Comment