அசைஞ்சா தேரு, ஆடினா அலைகடல்னு அழகா இருந்த நயன்தாராவுக்கு இப்போது கண்ணாடி பார்த்தாலே கவலையாக இருக்கிறதாம். (அவருக்கு மட்டுமா?) |
கொஞ்சம் புஷ்டியானால் அழகு கூடுமே என்றார்களாம் கூடவே இருக்கிற தோழிகளும், தோழர்களும். ஆனால், அதையெல்லாம் அந்த நேரத்தில் பிடிவாதமாக மறுத்து வந்த நயன் திடீரென்று வேறொரு முடிவுக்கு வந்திருக்கிறாராம்.
அரை செஞ்சுரியை எட்டிய, அல்லது தாண்டிய ஹீரோக்கள் எல்லாருமே இந்த ஆயுர்வேத முகாம்களில்தான் தஞ்சமடைகிறார்கள். இதையெல்லாம் நன்றாக கேள்விப்பட்டும் இத்தனை காலம் அதில் அக்கறை காட்டாத நயன்தாரா இப்போது சம்மதிக்க என்ன காரணம்? மனம் கவர்ந்தவரின் விருப்பமும் அதுவாக இருப்பதால்தானாம். “கவலையிலேயே உன் முகம் மாறிடுச்சு. உடம்பை பார்த்துக்கோ” என்றாராம் அக்கறையாக. பார்க்கிறவரு சொன்னா, கேட்கிறவரு கேட்டுதானே ஆகணும்? |
தன் கைவசம் இருக்கிற படங்களை முடித்துவிட்டு சுமார் ஒரு மாதம் லாங் லீவ் எடுக்கப் போகிறாராம். இந்த நேரத்தில் கேரள ஆயுர்வேத சிகிச்சை செய்து உடலையும் மனசையும் முன்பு போல பாலீஷ் ஆக்கிக் கொள்வது என்பதுதான் நயன்தாராவின் திட்டம்.
0 comments:
Post a Comment