
தனுஷ், நேமிசந்த் ஜபக் இருவரும் கூடிப் பேசி முடிவெடுத்தபோது இப்படத்தின் இயக்குனராக ஒப்பந்தம் ஆனவர் சிராஜ். படிக்காதவன் என்ற மாபெரும் ஹிட் படத்தைக் கொடுத்தவர் என்பதால் ரொம்ப ஆர்வமாகவே இந்த படத்தைத் துவங்க உதவினார் தனுஷ். அப்போது சிராஜுக்குப் பேசப்பட்ட சம்பளம் சுமார் ஒன்றேகால் கோடி. பொக்கிஷம் படத் தோல்விக்குப் பிறகு மாப்பிள்ளையை சன் பிக்சர்சுக்குக் கைமாற்றிவிட்டார் நேமிசந்த் ஜபக். அங்குதான் துவங்கியது பிரச்னை.வேக வேகமாகத் துவங்கிய மாப்பிள்ளை படம் ‘டிராப்’ என்கிறார்கள் திரையுலகத்தில். என்ன காரணமாக இருக்கும்? பொதுவாக ஒரு படம் நின்று போக நடிகர் நடிகைகளின் கால்ஷீட் சொதப்பல் காரணமாக இருக்கும். ஆனால் இங்கே அப்படத்தின் இயக்குனர்தான் காரணமாம்
ஒன்றேகால் கோடி ரூபாய் கொடுக்கிற அளவுக்கு இந்தப் படம் அவரது சொந்தச் சரக்கல்ல. ரீமேக்தானே, வேண்டுமென்றால் முப்பத்தைந்து லட்சம் வாங்கிக்கொள்ளச் சொல்லுங்கள் என்று ஆரம்பித்தார்களாம் பஞ்சாயத்தை. அதிர்ந்துபோன சிராஜ், அன்றே இந்தப் படத்திலிருந்து விலகிவிட்டதாகக் கூறப்படுகிறது. இப்போதைக்கு சுந்தர்.சியுடன் சேர்ந்து அவர் தயாரிக்கும் படத்திற்கான வேலைகளில் இறங்கிவிட்டாராம்.
0 comments:
Post a Comment