
த்ரிஷா இதுவரை எத்தனையோ வேடங்களில் நடித்துவிட்டார். ஆனாலும், நடிகையாக அவர் இதுவரை எந்தப் படத்திலும் நடித்ததில்லை. அந்தக் குறையை போக்கியிருக்கிறது விண்ணைத்தாண்டி வருவாயா.
கௌதமின் இந்தப் படத்தில் கேரளாவிலிருந்து தமிழில் நடிக்கவரும் இளம் நடிகை வேடத்தில் த்ரிஷா நடித்துள்ளார். நடிகையாக இது அவருக்கு முதல் அனுபவம்.
த்ரிஷா நடிக்கும் படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிபவர் சிம்பு. இருவருக்கும் ஒரு கட்டத்தில் காதல் ஏற்படுகிறது. காதல் கூடலில் முடிந்ததா, ஊடலில் பிரிந்ததா என்பது கதை.
தனது வாழ்வில் நடந்த சம்பவம்தான் விண்ணைத்தாண்டி வருவாயா என்று கூறுகிறார் கௌதம். அதாவது அவரது சொந்த காதல் கதை.
காதல் யூனிவர்சல் சப்ஜெக்ட் என்பதாலா தெரியவில்லை, படத்தின் பிரிமியரை நியூயார்க்கில் நடத்த திட்டமிட்டிருக்கிறார். படத்தின் கிளைமாக்ஸ் உள்பட பல முக்கிய காட்சிகள் நியூயார்க்கில்தான் எடுக்கப்பட்டன.
ஹாலிவுட் படம் எப்போ சார்?
0 comments:
Post a Comment