Wednesday, January 13, 2010

மறுபடியும் பெட்டிக்குள் முடங்கிக்கொண்டது அங்காடி தெரு

மறுபடியும் பெட்டிக்குள் முடங்கிக்கொண்டது அங்காடி தெரு

பொங்கலுக்கு ரிலீஸ் என்று கம்பீரமாக அறிவிக்கப்பட்ட அங்காடி தெரு பிப்ரவரி வெளியீடு என்று இப்போதைக்கு சமாதானம் சொன்னாலும், அதுவும் சந்தேகம்தான் என்கிறார்கள் ஐங்கரன் வட்டாரத்தில்.

ஏன்? படத்தின் பட்ஜெட்தான். புதுமுகங்களை வைத்துக்கொண்டு ஆறு கோடிக்குப் படம் எடுத்தால் எப்படி விற்பனை செய்வதாம்?விநியோகஸ்தர்கள் ஐங்கரன் சொல்கிற விலையைக் கேட்டு ஓட்டம் பிடிக்கிறார்கள். சொந்தமாக ரிலீஸ் செய்யலாம் என்று நினைத்தால் முந்தைய பாக்கி வந்து மிரட்டுகிறதாம். என்னதான் செய்வார்கள்?

அங்காடி தெரு வெளிவராமல் அடுத்த படத்திற்கு அட்வான்ஸ் வாங்க மாட்டேன் என்பது படத்தின் டைரக்டர் வசந்த பாலனின் தார்மீகக் கொள்கையாம்.


0 comments:

Post a Comment