Wednesday, January 13, 2010

“ஆயிரத்தில் ஒருவன்”, “குட்டி”, “நாணயம்”, “போர்க்களம்”; பொங்கலுக்கு 4 படங்கள்

“ஆயிரத்தில் ஒருவன்”, “குட்டி”, “நாணயம்”, “போர்க்களம்”; பொங்கலுக்கு 4 படங்கள்

பொங்கல் பண்டிகையையொட்டி வருகிற 14-ந் தேதி 10 புதுப்படங்கள் ரிலீசாகும் என எதிர்பார்க்கப்பட்டது. இறுதியாக “ஆயிரத்தில் ஒருவன்“, “குட்டி”, “நாணயம்”, “போர்க்களம்” ஆகிய 4 படங்கள் மட்டுமே வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அஜீத்தின் “அசல்”, சரத்குமாரின் “ஜக்குபாய்”, சிம்புத்தேவன் இயக்கத்தில் தயாராகும் இரும்புக்கோட்டை முரட்டுக் சிங்கம் போன்ற படங்கள், பொங்களுக்கு எதிர்பார்க்கப்பட்டு தள்ளி வைக்கப்பட்டு உள்ளன. “அவதார்”, “வேட்டைக்காரன்” படங்கள் அதிக தியேட்டர்களில் திரையிடப்பட்டு உள்ளன. தியேட்டர் வசதி இல்லாததால் இப்படங்கள் தள்ளிப்போகின்றன.
“ஆயிரத்தில் ஒருவன்” படத்தில் கார்த்தி நாயகனாக வருகிறார். ரீமாசென் ஆண்ட்ரியா இருவரும் நாயகிகள். செல்வராகவன் இயக்கியுள்ளார். சாகசங்கள் நிறைந்த படமாக ஹாலிவுட் சாயலில் எடுத்துள்ளனர். ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பில் உள்ளது.
“குட்டி” படத்தில் தனுஷ் ஸ்ரேயா ஜோடியாக நடித்துள்ளனர். முக்கோண காதல் கதையாக உருவாகியுள்ளது. “நாணயம்” படத்தில் பிரசன்னா, சிபிராஜ் என இரு ஹீரோக்கள் இணைந்து நடித்துள்ளனர். ஆக்ஷன் கதை. போர்க்களம் படமும் அடிதடி சண்டைப்படமாக தயாராகியுள்ளது. வில்லன் நடிகர் கிஷோர் கதாநாயகனாக நடித்துள்ளார்.
வெளியூரில் இருந்து வரும் இளம் பெண்ணுக்கு இளைஞன் ஒருவன் அடைக்கலம் கொடுக்கிறான். இதனால் அவன் சந்திக்கும் எதிர்ப்புகளும் அதிலிருந்து எப்படி மீள்கிறான் என்பதும்மே கதை.

0 comments:

Post a Comment