
தமிழ் பட உலகின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவரான அஜீத்குமாரை, ‘அல்டிமேட் ஸ்டார்’ என்று ரசிகர்கள் செல்லமாக அழைத்து வருகிறார்கள். அவருடைய பெயருக்கு முன்னால், ‘அல்டிமேட் ஸ்டார்’ என்ற பட்டத்தைப் பயன்படுத்தி வருகிறார்கள்.
இந்த பட்டம் வேண்டாம் என்று அஜீத்குமார், திடீர் முடிவு எடுத்து இருக்கிறார். அவர் இப்போது நடித்து முடித்து இருக்கும் ‘அசல்’ படத்தின் டைட்டிலில், ‘அல்டிமேட் ஸ்டார்’ என்ற பட்டத்தை பயன்படுத்த வேண்டாம் என்று கேட்டுக்கொண்டிருக்கிறார்.
இதுதொடர்பாக, அந்த படத்தை தயாரித்துள்ள சிவாஜி புரொடக்ஷன்ஸ் நிறுவனத்துக்கு அஜீத்குமார் ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். அதில் இனி அல்டிமேட் ஸ்டார் என படத்துடன் படத்திலோ அதன் விளம்பரங்களிலோ தன் பெயரைப் போட வேண்டாம் என்று கூறியுள்ளார்.

“சமீபகாலமாக இந்திய சினிமா வேறு ஒரு திசையில் பயணப்பட ஆரம்பித்து இருக்கிறது. இந்த சமயத்தில், சில மரபுரீதியான மாற்றங்களை நான் வரவேற்க ஆசைப்படுகிறேன்.
எனவே, சிவாஜி புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் நான் நடித்து வெளிவரும் அசல் படத்திலிருந்து ‘அல்டிமேட் ஸ்டார்’ என்ற பட்டம், பட டைட்டில்களிலோ, இனி வரும் விளம்பரங்களிலோ பயன்படுத்த வேண்டாம் என்ற முடிவை எடுத்துள்ளேன்.
என் போன்ற நடிகர்களையும், ரசிகர்களையும் பொதுமக்கள் எப்போதும் கண்காணித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை கவனத்தில் கொண்டு, இந்த முடிவை நான் எடுத்து இருக்கிறேன்.
என் ரசிகர்கள் கண்ணியமானவர்கள் என்ற கருத்து எப்போதும் பொதுமக்கள் மத்தியில் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்…” என்றார்.
0 comments:
Post a Comment