Monday, January 25, 2010

கோவாவில் சினேகா பிகினி டிரஸ்ஸில் இல்லை

கோவாவில் சினேகா பிகினி டிரஸ்ஸில்  இல்லை!

கோவா படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பைப் படம் ரிலீஸ் ஆகப்போகும் கடைசி நேரத்தில் வைத்திருந்தார்கள். தயாரிப்பாளர் சவுந்தர்யா மட்டும் வரவில்லை. வந்தால் எல்லாரும் திருமணம் பற்றியே பேசுவார்கள். அது கோவா பிரஸ் மீட்டாக இருக்காது என்பதால் வரவில்லையாம்.

அப்படியிருந்தும் கோவாவைத் தாண்டிச் சில கேள்விகள். அதற்கும் வழக்கம் போல கலகலப்பாகப் பதில் சொல்லிக்கொண்டிருந்தார் வெங்கட் பிரபு. கரகாட்டக்காரனை நீங்க ரீமேக் பண்ணப் போறதா சொல்றாங்களே? “அப்படியா… நல்லாயிருக்கே. ஆனால் அதில யாரை நடிக்க வைக்கலாம்னு தெரியலையே? வேணும்னா பிரேம்ஜிய நடிக்க வைக்கலாம். ராமராஜன் சார் மாதிரி அவரு கரகம் ஆடினா நல்லாதான் இருக்கும்” என்று சொல்லி நிருபரை ஸ்தம்பிக்க வைத்தார் வெங்கட்பிரபு.

படத்திற்கு ஏ சர்டிபிகேட் கொடுத்துவிட்டார்கள் என்பதை கொஞ்சம் வருத்தத்தோடு பகிர்ந்து கொண்டவர், “ஃபாரின்லே 18 வயசுக்கு கீழே இருக்கிறவங்க பெற்றவர்கள் துணையுடன் பார்க்கலாம்னு ஒரு கிளாஸ் இருக்கு. இங்கே அது இல்லை. என்ன செய்யுறது? இது ஜாலியான படம். வேறொண்ணும் சொல்றதுக்கு இல்லை” என்றார்.

கோவா படத்தில் சினேகா பிகினி டிரஸ்ஸில் நடிச்சிருக்காங்க என்றொரு தகவல் காட்டுத் தீயாகப் பரவிக்கொண்டிருக்கிறது. அடுத்த வாரத்தில் படம் ரிலீஸ். இப்போதாவது இந்த விடுகதைக்கு விடை சொல்வார்களா? ஆவலோடு எதிர்பார்த்த அந்த விஷயத்தையும் போட்டு உடைத்தார் வெங்கட்பிரபு.

ஒரு முன்னணி பத்திரிகையில் அவங்க பிகினி டிரஸ்சில் நிற்கிற மாதிரி ஒரு ஸ்டில் வந்திச்சு. அது மார்பிங். அப்படியெல்லாம் இந்த படத்திலே நடிக்கலை. தெளிவாகவே எழுதிடுங்க என்றார். பக்கத்திலிருந்த சினேகா, வெங்கட் பிரபுவைக் கையெடுத்துக் கும்பிட்டார் நன்றியோடு.

படத்தில் இவர்தான் அப்படி டிரஸ் அணியவில்லையே தவிர, முக்காலே முழு சதவீதம் டூ பீஸ் டிரஸ்சில்தான் பெண்கள் அலைகிறார்களாம் படம் நெடுகிலும். காட்சிகளிலும் அங்கங்கே பலமான அக்கிரமங்கள் அரங்கேறியிருக்கிறதாம். இது ப்ளஸ்ஸா, மைனஸா என்று புரியாமல் தடுமாறிக்கொண்டிருக்கிறதாம் கோவா டீம்.

இதுவரைக்கும் ஓ.கே. அதன்பின் வந்த கேள்விகள்தான் ஏடாகூடம். ரஜினி தன்னோட பொண்ணு சவுந்தர்யாவுக்கு 75 கோடி ரூபாய் சொத்து எழுதி வச்சிருக்கறதாகவும், அந்த தைரியத்தில்தான் பட்ஜெட்டை கன்னாபின்னான்னு ஏத்திட்டீங்கன்னும் ஒரு பேச்சு இருக்கே? பதறிப்போன வெங்கட், அவங்க சொத்து பிரச்சனையெல்லாம் நமக்கு எதுக்கு சார்? அப்படி பார்த்தா நான் எதுக்கு இந்த பசங்களை வச்சு எடுக்கணும்? பேசாம விஜய் அஜீத்துன்னு போயிருப்பேனே என்றார்.

படத்தை பார்த்திட்டு இம்ப்ரஸ் ஆன யுவன், எக்ஸ்ட்ரா இரண்டு பாடல்கள் போட்டு கொடுத்திருக்கிறாராம். ஆஹா…


இந்தியாவில் ரூ.100 கோடியைத் தாண்டி “அவதார்”

இந்தியாவில் ரூ.100 கோடியைத் தாண்டி “அவதார்”

ஹாலிவுட் திரைப்படம் “அவதார்” வசூல், இந்தியாவில் ரூ.100 கோடியைத் தாண்டியுள்ளது. அந்தப் படத்தை இங்கு திரையிட்டுள்ள பாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோஸ் நிறுவனம் இதைத் தெரிவித்துள்ளது. இதுபற்றி அந்நிறுவன தலைமைச் செயல் அதிகாரி விஜய் சிங் கூறியதாவது:

இந்தியாவில் “அவதார்” இதுவரை ரூ.101 கோடி வசூலித்துள்ளது. அமீர்கானில் “3 இடியட்ஸ்” படத்துக்கு அடுத்தததாக இந்தப் படம் ஆதரவை பெற்றுள்ளது. 3டி தொழில்நுட்பம் ரிலீஸ் மற்றும் அது இல்லாத பிரின்ட் வெளியான தியேட்டர்களிலும் சமமான வசூல் கிடைத்துள்ளது.
ஆங்கில பிரின்ட்கள் ரூ.50.5 கோடி வசூலித்தன.

இந்தியில் ரூ.26 கோடி கிடைத்தது. தமிழ், தெலுங்கு மொழி பிரின்ட்கள் ரூ.24 கோடி வசூல் அளித்தன.

உலகம் முழுவதும் இந்த படம் டிசம்பர் 18ல் வெளியானது. ஒரு மாதத்தில் சுமார் ரூ.6,000 கோடி வசூலை குவித்துள்ளது என்றார். நவீன தொழில்நுட்பத்தில் “அவதார்” படம் ரூ.1,200 கோடி செலவில் தயாரிக்கப்பட்டது.

வெளியான ஒரே மாதத்தில் 5 மடங்கு அதிக லாபத்தை அள்ளித் தந்துள்ளது. அமீர்கானின் “3 இடியட்ஸ்” படம் சர்வதேச அளவில் வெளியான 19 நாளில் ரூ.315 கோடி வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது





விஜய்யுடன் நடிக்க ஆசை.. ரீமாசென்

விஜய்யுடன் நடிக்க ஆசை.. ரீமாசென்


நடிகர் விஷால் சில மாதங்களுக்கு முன்பு ஒரு நடிகையை காதலிப்பதாக பரபரப்பான பேட்டி அளித்தார். ஆனால் நடிகை பெயரை வெளியிட மறுத்து விட்டார். அந்த நடிகை யார் என்று திரையுலக வட்டாரம் தலையை பிய்த்தது.
பிறகு நடிகை ரீமாசென் என்று தெரிவித்து வந்தனர்.
விஷாலும் ரீமாசென்னும் “செல்லமே” படத்தில் இணைந்து நடித்தனர். “திமிரு” படத்திலும் ஜோடியாக நடித்தார்கள்.
அப்போது தான் காதல் மலர்ந்ததாக கூறப்பட்டது. இந்த காதல் விவகாரம் பற்றி நீண்ட நாட்களுக்கு பிறகு ரீமாசென் கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது:-

விஷாலையும் என்னையும் இணைத்து செய்திகள் வெளியாகி உள்ளன. அப்படி காதல் எதுவும் இல்லை. அது வெறும் கிசுகிசுதான்.

எனக்கு திருமணம் எப்போது நடக்க வேண்டுமோ அப்போது நடக்கும். எனக்கு பொருத்த மானவரை இன்னும் சந்திக்கவில்லை என்றார்.

மேலும் அவர் கூறியதாவது:-

“ஆயிரத்தில் ஒருவன்” படத்தில் சிறப்பாக நடித்து இருப்பதாக பாராட்டுகள் குவிகின்றன. மகிழ்ச்சியாக இருக்கிறது. தமிழ் நடிகர்களில் விஜய்யை பிடிக்கும். அவருடன் நடிக்க ஆசைப்படுகிறேன்.

“ஆயிரத்தில் ஒருவன்” படத்தில் நடித்தது மறக்க முடியாத அனுபவம். பார்த்திபனுடன் காதல் செய்யும் காட்சிகளில் விழுந்து விழுந்து சிரித்தேன். பரதநாட்டியம் ஆடியது கஷ்டமாக இருந்தது.

சிம்புவுடன் வல்லவன் படத்தில் நடித்தது இனிய அனுபவம். ஆனால் அதில் சைக்கோ ரக பெண்ணாக வந்தது பிடிக்கவில்லை. அப்படி நடித்தது நான் செய்த பெரிய தவறு.


Sunday, January 24, 2010

நாணயம் – திரைவிமர்சனம்


நடிப்பு: பிரசன்னா , சிபிராஜ் , ரம்யா
இசை: ஜேம்ஸ் வசந்தன்
தயாரிப்பு : எஸ்.பி.பி சரண
இயக்கம் : சக்தி கே ராஜன்
2008 – ஆம் ஆண்டு வெளியான ”த பாங்க் ஜொப் ” என்ற ஆங்கில படத்தின் ரீமேக் தான் இந்த நாணயம். படத்தின் நாயகன் பிரசன்னா ஒரு பட்டதாரி , முதலாளி ஆகவேண்டும் என்ற ஆசையில் இருக்கிறார் ஒருசமயத்தில் பேங்க் முதலாளியான எஸ்பிபிக்கு உதவ எஸ்பிபியும் பதிலுக்க்கு அவர் பேங்கில் ஒரு வேலையும் போட்டு கொடுக்கிறார். ஆங்கில படத்தில் வருவது போன்று பேங்க் லாக்கரை பாதுகாக்க புது வழி ஒன்றை கண்டுபிடிக்கிறார் அதை தன் பேங்க் கிளையில் செயல்படுத்தியும் பார்க்கிறார்.வில்லனாக சிபிராஜ் தன்பங்கை சரியாக செய்துள்ளார்.படத்தின் நாயகன் பிரசன்னாவுக்கும் சிபிக்கும் நடக்கும் பிரச்சினைகளே இந்த படத்தின் கதை.
பட்டதாரியும் பேங்க் அதிகாரியாகவும் பிரசன்னா நடிப்பில் தன் திறமையை காட்டியுள்ளார். இந்த படத்தில் வில்லனாகும் சிபி வில்லனுக்கென்று ஒரு புது இமெஜ்-ஐ உருவாக்கியுள்ளார். படத்தின் நாயகி ரம்யா புதுமுகம் தான் ஆனால் சில காட்சிகளில் அவரின் நடிப்பு இயல்பாக தெரிகிறது. பேங்க் பொருத்தமாக தான் இருக்கிறது ஆனால் இது போன்று பதிதாக கண்டுபிடிப்பதை அனுமதிப்பார்களா என்றால் கொஞ்சம் ஒவராத் தான் இருக்கு. வில்லன் கும்பல் பேங்க் பணத்தை கொள்ளைஅடிக்கதான் இவ்வளவு போராடுகிறது என்று கிளைமாக்ஸ்சை பார்த்தால் நமக்கு படத்தின் முடிவு கொஞ்சம் வித்தியாசமாகத்தான் இருக்கிறது. இசையில் ஜேம்ஸ் வசந்தனிடம் நாம் சுப்பிரமணியபுரம் போல் நிறைய எதிர்பார்த்தோம் ஆனால் ”நான் போகிறேன்…” ஒரு பாடல் மட்டும் தான் மனதில் நிற்கிறது மற்ற பாடல்கள் பரவாயில்லை. ஒளிப்பதிவாளர் ஓம்பிரகாஷ் அழகாக படம் பிடித்து காட்டியுள்ளார். மிகப்பெரிய அள்வில் ஓம்பிரகாஷ் வருவார் என்பதற்கு இந்த படம் ஒரு உதாரணம். குடும்பத்தோடு பார்க்கலாம் மொத்தத்தில் நாணயம் மதிப்பு குறைவாக உள்ள பணம்.















குட்டி திரை விமர்சனம்





நடிப்பு: தனுஸ், ஸ்ரேயா , மேக்னா நாயுடு ,வின்சென்டஇசை: தேவி ஸ்ரீ பிரசாத்.ஒளிப்பதிவு: பாலுஇயக்கம் : மித்ரன் ஆர். ஜவஹர்
ஆரியா என்ற தெலுங்கு படத்தின் ரீமேக்கு தான் இந்த குட்டி. கல்லூரி மாணவி ஸ்ரேயாயைவை காதலிக்கும் MP மகன் வின்சென்ட்,கல்லூரிக்குபுதிதாக சேரும் மாணவர் தனுஸ் இருவரும் ஸ்ரேயாவை காதலிக்கின்றனர் இறுதியாக ஸ்ரேயா யாரைத் திருமணம் செய்து கொள்கிறார்என்பது தான படத்தின் கதை.
தனுஸ் நடிப்பில் முதிர்ச்சியுடன் காமெடியும் தெரிகிறது. கல்லூரி மாணவியாக ஸ்ரேயா அழகாகத் தெரிகிறார். வின்சென்ட் ஸ்ரேயாவிடம்நீ காதலிக்க மறுத்தால் தற்கொலை என்று மிரட்ட ஸ்ரேயாவும் ஐ லவ் யு சொல்கிறார். தனுஸால் ஒவ்வொரு விதத்திலும் வின்செண்ட் அப்செட்ஆவது சூப்பர். முதல் பாதி முழுக்க திரைக்கதையில் வேகம் அடுத்த பாதி வேகம் குறைவு. தனுஸ் அடிக்கடி செய்யும் அவருக்கெ உரிய காமெடிகலக்கல்.வின்சென்ட் முன் ஸ்ரேயாவிடம் தனுஸ் தன் காதலை தெரியப்படுத்தும் காட்சி திரையில் அருமை. இயக்குநர் ஜவஹர் ஏற்கனவே தனுஸசைவைத்து யாரடி நீ மோகினி படத்தை இயக்கியதால் தனுஸின் அத்தனை திறமையையும் சரியாக பயன்படுத்தியுள்ளார். ஸ்ரேயாவின் தோழியாகமேக்னா நாயுடு பொருத்தமான தோழியாக வலம் வந்திருக்கிறார்.
இசையில் தேவி பிரசாத் ”யாரோ என நெஞ்சை..” பாடல் மட்டும் நன்றாக இருக்கிறது மற்றவை பரவாயில்லை அதோடு ஏற்கனவே கேட்ட மெட்டில் தான்பாடல்கள் உள்ளது. கல்லூரியை அழகாக படம் பிடித்து நம் கண்ணுக்கு விருந்தளித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் பாலு, ஆர்த்தி மயில்சாமி கொடுத்தவேலையை சரியாக செய்துள்ளனர். மொத்தத்தில் இந்த குட்டி ஒரு கல்லூரி ”மான் குட்டி “.

ஆயிரத்தில் ஒருவன்


பல எதிர்பார்ப்புகளுடன் சில வருடங்கள் கழித்து வெளிவந்திருக்கும் செல்வராகவனின் ” ஆயிரத்தில் ஒருவன் “ – திரை விமர்சனம்.
நடிப்பு: கார்த்தி, ரீமா சென், ஆண்ட்ரியா, பார்த்திபன்இசை: ஜிவி.பிரகாஷ்.ஒளிப்பதிவு:ராம்ஜி
சோழர்கள் பாண்டியரின் சிலையையும் பொக்கிஷத்தையும் திருடிச்செல்கின்றனர். இதை மீட்க அரசு நிர்ணயிக்கும் குழுவில் ரீமா , ஆண்ட்ரியா , அழகம் பெருமாள். இவர்களுக்கு உதவி செய்ய படத்தின் நாயகன் கார்த்தி. இந்த குழு பாண்டியரின் சிலையையும் பொக்கிஷத்தை மீட்க படும் போராட்டமே திரைக்கதை. அரசர்காலம், தீவு, ஆபத்து, காட்டுவாசி , வாள், பாம்பு , பாதளம், என்ற ஒரு புதிய வழியில் பயணித்திருக்கிறார் செல்வா, கார்த்தி நடிப்பு படத்திற்கு உண்மையான பலம். சோழர்காலம் பாண்டிய மன்னரின் காலம் நம் எதிர்பார்ப்பிற்கு கொஞ்சம் குறைவாகத்தான் இருக்கிறது. இந்த மாதிரி படத்திற்கு செட் எவ்வளவு முக்கியம் என்று கண்டிப்பாக இயக்குனர்களுக்கு தெரிந்து இருக்க வேண்டும்.
முதல் பாதி வரை படம் விறுவிறுப்பாக தான் செல்கிறது. ஒளிப்பதிவு இன்னும் அந்த காலத்திற்கு நம்மை கூட்டி செல்லவில்லை. ஒருவேளை நாம் பார்த்த அவதார் திரைப்படத்தினால் நம் கண்கள் எதிர்பார்ப்பு சில காட்சிகளில் மட்டும் மகிழ்விக்கிறது. சோழ மன்னனாக பார்திபன் கச்சிதம். பார்திபபின் காட்சிகளில் கொஞ்சம் வேகம் கூட்டிஇருக்கலாம். இராணுவ அதிகாரி அழகம் பெருமாள் நிஜ அதிகாரி போலவே நடித்துள்ளார். ரீமா , ஆண்ட்ரியா படத்தில் சரியாக பயன்படுத்தப்பட்டு இருக்கிறார்கள். இரண்டாம் பாதி பாதாளத்தில்; வேகம் இல்லை.
இசையில் “உன்மேலே ஆசைதான்” பாடல் தவிர மற்றவை சொல்லும்படி இல்லை. கிராபிக்ஸ் இன்னும் முக்கியத்துவம் கொடுத்திருக்கலாம். சொல்ல வேண்டியதை ஆரம்பத்தில் இருந்து கடைசிவரை மாறாமல் திரைக்கதையுடன் பயணம் செய்கிறார் செல்வா.
மொத்தத்தில் ஆயிரத்தில் ஒருவன் நூற்றில் ஒருவன் தான்.

Thursday, January 14, 2010

திருமணம் எப்போது? சவுந்தர்யா ரஜினி


திருமணம் எப்போது? சவுந்தர்யா ரஜினி

தொழிலதிபர் அஸ்வின் குமார்& ரஜினி மகள் சவுந்தர்யா நிச்சயதார்த¢தம் அடுத்த மாதம் 17ம் தேதி நடக்க உள்ளது.
இதுபற்றி சவுந்தர்யா கூறியதாவது:
கடந்த ஓராண்டாக அஸ்வினை எனக்கு தெரியும். எனது பெற்றோரும் அஸ்வினின் பெற்றோரும் குடும்ப நண்பர்கள். எனது காதலை பற்றி சொன்னதும் அப்பா சம்மதம் தெரிவ¤த்தார். அதனால் இது பெற்றோரால் நிச்சயிக்கப்பட்ட காதல் திருமணம் எனலாம். அஸ்வினை தேர்ந்தெடுத்ததற்காக நான் சந்தோஷப்படுகிறேன். நான் சினிமாவில் இருப்பதால் இதே துறையை சேர்ந்தவரை தேர்ந்தெடுக்கும் விருப்பம் எப்போதும் இருந்ததில்லை. அதே நேரம், எனது பணியை அஸ்வின் மதிக்கிறார். திருமணத்துக்கு பின் நாங்கள் சென்னையில்தான் இருக்கப்போகிறோம்.

அவரது பிசினஸும் இங்கேதான். எனது பட நிறுவன வேலைகளும் இங்கேதான். அதனால் வேறு எங்கே போவது? நிச்சயதார்த்தம் பிப்ரவரி 17&ம் தேதி நடக்கிறது. திருமண தேதி இன்னும் முடிவாகவில்லை. இந்த ஆண்டில்தான் திருமணம் இருக்கும். இப்போதைக¢கு ‘கோவா’ படத்தின் இறுதிகட்ட பணிகளில் பிசியாக இருக்கிறேன். இப்படம் இம்மாத இறுதியில் ரிலீசாகும். இவ்வாறு சவுந்தர்யா கூறினார்.


சென்னையில் ஒருவாரம் படப்பிடிப்பு:நயன்தாராவுக்கு பாதுகாப்பு பிரபுதேவா மனைவி தாக்க திட்டம்?

சென்னையில் ஒருவாரம் படப்பிடிப்பு:நயன்தாராவுக்கு பாதுகாப்பு பிரபுதேவா மனைவி தாக்க திட்டம்?

நயன்தாரா “பாஸ் (எ) பாஸ்கரன்” என்ற படத்தில் ஆர்யா ஜோடியாக நடித்து வருகிறார். இதன் படிப்பிடிப்பு 25 நாட்களாக கும்பகோணத்தில் நடந்தது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பை இயக்குனர் ராஜேஷ் சென்னைக்கு மாற்றியுள்ளார். பொங்கல் முடிந்ததும் 18-ந் தேதியில் இருந்து ஒருவாரம் இங்கு படப்பிடிப்பு நடக்க உள்ளது. இதற்காக நயன்தாரா சென்னை வந்து தங்க இருக்கிறார்.
படப்பிடிப்பின் போது நயன்தாராவை பிரபுதேவா மனைவி ரம்லத் தாக்கலாம் என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பிரபுதேவா- நயன்தாரா காதலை ரம்லத் கடுமையாக எதிர்த்து வருகிறார். இருவரும் ஐதராபாத், திருவனந்தபுரம் நட்சத்திர ஓட்டல்களில் ஒன்றாக தங்குவது பற்றி அவ்வப்போது ரம்லத்துக்கு தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன. கணவரை விட்டு விடும்படி செல்போனில் காரசாரமாக திட்டினார். எஸ்.எம்.எஸ்.கள் தொடர்ந்து அனுப்பியும் எச்சரித்து வருகிறார்.
ஆனால் நயன்தாரா எதிர்ப்பை பொருட்படுத்தவில்லை. பிரபுதேவா பெயரை கையில் பச்சை குத்தியுள்ளார். ஐதராபாத்தில் சமீபத்தில் நடந்த படவிழாவுக்கு இருவரும் ஜோடியாக வந்து அருகருகே உட்கார்ந்து இருந்தனர். வெளிநாடுகளிலும் ஒன்றாக ஷாப்பிங் போகிறார்கள். விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனால் ரம்லத் ஆத்திரமாகியுள்ளார். நயன்தாராவை பார்த்தால் அடிப்பேன் என்று பகிரங்கமாக அறிவித்தார். இந்த மிரட்டலுக்கு பின் நயன்தாரா சென்னை வருவதை குறைத்து கொண்டார். வந்தாலும் ஒருநாள் மட்டுமே தங்கினார். அவர் தங்கும் இடம் திரையுலகினர் யாருக்கும் தெரியப்படுத்தப்படுவது இல்லை.
இந்த நிலையில் “பாஸ் (எ) பாஸ்கரன்” படப்பிடிப்புக்காக கூடுதல் நாட்கள் சென்னையில் தங்க இருக்கிறார். நயன்தாராவிடம் கேரளாவில் உள்ள வீட்டுக்கே சென்று சண்டை போட ரம்லத் திட்டம் போட்டார். அவருக்கு நெருக்கமானவர்கள் தடுத்து விட்டனர். இப்போது சென்னைக்கு நயன்தாரா வருவது வசதியாகிவிட்டது. படப்பிடிப்பில் அத்துமீறி நுழைந்து நயன்தாராவை அடிக்க வியூகம் வகுப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து நயன்தாராவுக்கு தனியார் செக்யூரிட்டிகளை கொண்டு பாதுகாப்பு அளிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. சிம்புவுடன் மோதிய போது தனுசுடன் நடித்த “யாரடி நீ மோகினி” படப்பிடிப்பு சென்னை ஸ்டூடியோவில் நடந்தது. அப்போது பாதுகாப்பு கருதி படப்பிடிப்பு தளத்துக்குள் வெளியாள் யாரையும் அனுமதிக்கவில்லை. வாசலில் ஆஜானு பாகுவான் அடியாட்கள் நிறுத்தப்பட்டு இருந்தனர். அதுபோல் இந்த படத்தின் படப்பிடிப்பையும் பாதுகாப்போடு நடத்த உள்ளனர்.

Wednesday, January 13, 2010

வேட்டைகாரனும் போச்சா?




யார் என்ன சொன்னாலும் நான் இப்படித்தான் நடிப்பேன் என்று அடம்பிடித்துக்கொண்டிருக்கும் இளையதளபதி நடித்து (?) கடந்த வாரம் ரிலீசான வேட்டைக்காரன் விஜயின் அழகிய தமிழ்மகன், குருவி, வில்லு வரிசையில் நான்காவதாக இணைந்துள்ளது. சண் டிவியின் உதவியுடன் 93 % ஒப்பினிங்குடன் முதல் மூன்று நாட்களில் வேட்டைக்காரன் 89லட்சம் ரூபாயை சென்னையில் வசூலித்தது. ஆனால் இந்தவாரம் திரைஅரங்குகளில் மக்கள்வரவு 70% ஆக குறைந்துள்ளது, மற்றும் இந்தவார இறுதி வசூல் 59 லட்சத்திற்கு வீழ்ச்சியடைந்துள்ளது.

விஜயின் அண்மைய படங்களில் இரண்டாவது வாரத்தில் 70% இற்கு மக்கள்வருகை குறைவடைந்தது வேட்டைக்காரனுக்கேயாகும். வில்லு, குருவி என்பன இரண்டாம் வாரத்தில் 80% மக்கள் வருகையை கொண்டிருந்தன,பின்னரே படிப்படியாக வீழ்ச்சியடைந்தன.ஆனால் வேட்டைக்காரன் ஒரேயடியாக 70% இற்கு வீழ்ச்சியடைந்தது மிகப்பெரும் பின்னடைவே. இந்த இரண்டு வாரங்களில் மொத்தவசூல் 2 கோடி 10 லட்சம், இது கந்தசாமி ,ஆதவன் என்பன இரண்டாம் வாரத்தில் வசூலித்ததிலும் பார்க்க குறைவான தொகை.

சண் நெட்வோர்க்கால் கூட விஜயை காப்பாற்ற முடியவில்லை. வழமையாக ஒரு நடிகனின் படத்தை அவனது வெறிப்படத்துடன்தான் ஒப்பிடுவார்கள்,விஜயின் முன்னைய படங்களையும் அவ்வாறே கில்லியுடன் ஒப்பிட்டார்கள்.ஆனால் இன்று வேட்டைக்காரன் எப்படி என்று ஒருவரிடம் கேட்டால் 'கில்லி' அளவுக்கு இல்லை என்றுகூட யாரும் கூறுவதில்லை , மாறாக குருவியை விட பரவாயில்லை என்றுதான் கூறுகிறார்கள். இதிலிருந்தே தெரிகிறது விஜய் தனது படங்களை எந்தத்தரத்தில் கொடுக்கிறார் என்று.பின்னர் எப்படி படம் வெற்றியடையும்? எங்கே இரண்டு நாள் கேப் கொடுத்தால் ஊடகங்கள் படத்தை தோல்வி என்று கூறிவிடுவார்களோ என்று அஞ்சி அடுத்தநாளே படம் வெற்றி என்று அறிவித்து விட்டார் நம்ம தலைவலி,சாரி தளபதி.முழுப்பூசனிக்காயை எப்படி சோற்றில் மறைக்க முடியும்?

ஆனால் நம்ம தளபதி சற்றும் சலனமிலாமல் அடுத்த படத்தையும் இதேபோல மொக்கை படமாக கொடுத்துவிட்டு கொஞ்சம் கூட வெட்கப்படாமல் அடுத்தநாளே வெற்றி என்று அறிவிப்பார்.

குறிப்பு

நாளைய தினம் வெளியாகும் sify.com இனது box office இல் வேட்டைக்காரனை வெற்றி அடைந்ததாக குறிப்பிடுவார்கள். இவர்கள் சண் நெட் வேர்க்கின் பிரச்சார பீரங்கிகள், இவர்களது box office இல் அனைத்து சண் நெட் வேர்க்கின் படங்களும் ஹிட் ஆனவையே.

இதுதான் அஜித்குமார் ...




இந்தப் பதிவை எழுதுவதால் நான் அஜித்திற்கு பிரசாரப்பீரங்கி என்றமுடிவுக்கு வந்துவிடவேண்டாம்

ரஜினி,கமல் என்ற இரு சாதனை சிகரங்களுக்குப் பின் அடுத்த தலைமுறை முன்னணி நடிகர்கள் பட்டியலில் தொண்ணூறுகளின் பிற்பகுதியிலிருந்து கடும்போட்டி நிலவியது.அப்போது முன்னணியிலிருந்த பிரஷாந்த்,விஜய்,அஜித் ஆகியோருக்கிடையே நடைபெற்றுக்கொண்டிருந்த போட்டி 2000 ஆம் ஆண்டின் ஆரம்பப்பகுதியில் பிரஷாந்த் பின்னடைவைச் சந்திக்க விக்ரம்,சூர்யா என்போர் போட்டியில் இணைய இன்றுவரை ரஜினி கமல் தங்களிடத்தில் இன்னும் சிம்மாசனமிட்டுள்ளனர் என்பது வேறுகதை.

ஆனால் சினிமாவின் எந்தவொரு பின்னணியில்லாமல் நடிக்கவந்து சினிமாத்துறையில் தொடர்ந்தும் தனக்கெனவொரு இடத்தை தக்கவைத்திருப்பது சாதாரணவிடயமல்ல,அமராவதி என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகினார் அஜித்.காதல்நாயகனாக வலம்வந்துகொண்டிருந்த அஜித் ஆரம்பகாலங்களில் அதிகமான பெண்ரசிகைகளைக் கொண்டவராகவிருந்ததால் காதல்,குடும்ப படங்களிலேயே நடித்திருந்தார்,அதன்பின்னர் சரணின் இயக்கத்தில் நடித்த அமர்க்களம், முருகதாசின் தீனா போன்ற படங்களின் மூலம் ஆக்ஷன்ஹீரோவாக புதிய பரிமாணம் எடுத்து அதிலும் வெற்றிபெற்றார்.இன்றுவரை ஒரு மாஸ் ஹீரோவாக முன்னணியிலிருப்பதுடன் ரஜினிக்கு அடுத்தபடியாக அதிக ஓபனிங் உள்ள நடிகராகவும் விளங்குகிறார்.

இப்போது நான் கூறவந்தது அஜித்திற்கும் மிடியாக்களுக்கும் இடையிலானஉறவு பற்றி,இது அனைத்து மிடியாக்கள் பற்றியுமல்ல,தொப்பிபொருத்தமானவர்களுக்கே......



இன்டர்நெட்,ப்ளாக்,எலக்ட்ரோனிக் மீடியாக்கள் என்பன இப்போதுதான் பிரசித்தம்,முன்னர் பிரிண்ட் மிடியாக்களும் தொலைக்காட்சிக்களும்தான் எல்லாமும்.அந்தக் கால கட்டத்தில் அஜித் வார இதழொன்றுக்கு வழங்கிய தனது "சூப்பர் ஸ்டார்" பற்றிய பேட்டி மூலம் பலரின் விமர்சனங்களுக்கும் ஆளானார், அஜித் தான் அந்த அர்த்தத்தில் கூறவில்லை என்று கூறினாலும் மீடியாக்கள் ஏற்றுக்கொள்ளும் நிலைமையில் இல்லை. சரி அஜித் அப்படித்தான் முதலில் கூறியிருந்தாலும் பின்னர் அப்படி கூறவில்லை என்று சொன்ன பின்பாவது விட்டிருக்கலாமல்லவா? ஆனால் தொடர்ந்தும் ரஜினி ரசிகர்களிடமிருந்து அஜித்தை பிரிக்க இதை ஒரு துரும்புச்சீட்டாக சில ஊடகங்கள் பயன்படுத்திவந்துள்ளன.

அதன் பின்னர் அவர் மீடியாக்களை சந்திப்பதை தவிர்த்தே வந்தார்,இதனால் ஆளாளுக்கு தாங்கள் விரும்பியதை எழுத ஆரம்பித்தனர்,அஜித்தான் எந்த பதிலோ மறுப்போ சொல்லமாட்டாரே இது போதாதா இவர்களுக்கு? அஜித் எங்காவது ஏதாவது கூறினால் உடனே அதனை திரிபுபடுத்தி புதுஅர்த்தம் கற்பிக்க ஒரு கூட்டமே ஆயத்தமாயிருந்தது. இன்டர்நெட்,ப்ளாக்,எலக்ட்ரோனிக் மீடியாக்கள் ஆதிக்கம் அதிகமானபின் ஒவ்வொரு நடிகர்களுக்கும் சார்பானவையாக இவை செயல்பட ஆரம்பித்தன.அஜித்தின் போட்டி நாயகர்களின் சார்பு ஊடகங்கள் இதில் முன்னணி வகித்ததென்றால் அது மிகையல்ல,குறிப்பாக ஒரு தொலைக்காட்சி குடும்பமும்,அவர்களது பத்திரிகைகளும் அஜித்தின்படங்கள் நன்றாக ஓடினாலும் அதுபற்றி கண்டுகொள்ளாமல் ஒருசில நடிகர்களின் தோல்வி படங்களைக்கூட வெற்றிப்படங்களாக சித்தரித்திருந்தன.

அண்மையில் அஜித் ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார் "எனக்கு ப்ளாக்பஸ்டர் ஹிட்களே இல்லை,எனது ப்ளாக்பஸ்டர் படங்கள் சூப்பர்ஹிட்,சூப்பர்ஹிட்கள் எல்லாம் ஹிட்கள்,ஹிட்கள் எல்லாம் அவரேஜ்,அவறேஜ்கள் எல்லாம் ப்ளாப்,இந்த ரகசியம்தான் எனக்கு விளங்கவில்லை" இது நூற்றுக்கு நூறு உண்மை,தமதுபடங்களை வெற்றியென்று அடுத்தநாளே அறிவிப்போர் மத்தியில் அஜித் பாராட்டப்படவேண்டியவரே,ஏனெனில் அஜித் எந்தப் படத்திற்கும் வெற்றியென உரிமை கோருவதில்லை.



மற்றைய நடிகர்கள் போல படத்தை வெளியிட்டுவிட்டு கூவி விற்க இவர் தொலைக்காட்சிகளுக்கு ஓடித் திரிவதில்லை.பில்லா படம் வெளிவருவதற்கு முன் பல ஆண்டுகளுக்குப் பின் கலைஞர் தொலைக்காட்சியில் ஒரு பேட்டி கொடுத்திருந்தார்,அதற்காக வஞ்சகமின்றி அனைத்துத் தொலைக்காட்சிகளுக்கும் ஒரு பேட்டி வீதம் கொடுத்திருந்தார்,அதன்பின் இன்னமும் சின்னத்திரைப்பக்கம் அஜித் 'தல'காட்டவில்லை.

ஆனாலும் ஒரு முன்னணித் தொலைக்காட்சி அஜித் படங்களை தோல்வி ஆக்க கடுமையாக உழைக்கும்.டாப் டென் படங்கள்,பாடல்கள் என்பவற்றில் இயலுமானவரை அஜித் படங்களை பின் வரிசையில் போட்டு படத்தின் மீதான பார்வையைக் குறைத்துவிடுவதோடு விமர்சனம் என்ற பெயரில் ஏதேதோ கூறி படத்தை வீழ்த்துவதற்கு கங்கணம் கட்டிக்கொண்டிருப்பார்கள். அஜித் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு இவர்களின் கலையகத்துக்கு வந்து பேட்டி கொடுத்திருந்தாலோ,இவர்களின் தொலைக்காட்சிக்கு நன்றி கூறியிருந்தாலோ டாப் டென்னில் முதலிடம் கிடைத்திருக்கும்.அல்லது தனது படத்தின் ஒளிபரப்பு உரிமையை இவர்களுக்குக் கொடுத்திருந்தாலோ அஜித் புராணம் பாடப்பட்டிருக்கும்.

இவற்றில் எதுவுமே அஜித் செய்யாததுதான் இவர்களுக்கு அஜித் பிடிக்காமல் போனகாரணம்.அதுவும் இவர்கள் அதற்குப் பயன்படுத்தும் டெக்னிக் இருக்கிறதே,போட்டி நடிகரின் படமொன்றுடன் அஜித் படம் ரிலிஸ் ஆகினால் அஜித் படத்திற்கு கண்டிப்பாக மூன்றாவதிடம்தான்.கூடவந்த ஒரு டப்பா படத்திற்கு இரண்டாமிடம்,அல்லது ஏலவேவந்து ஓடிக்கொண்டிருக்கும் படம் இரண்டாமிடத்தை பிடிக்கும்,இதை உண்மையென்று நம்பி ஞாயிறுகாலை தொலைக்காட்சிக்கு முன்னிருந்த காலங்களுமுண்டு.இப்போதான் இவர்களின் டப்பா டான்ஸ் ஆடிக்கிட்டிருக்கே....



அந்த முக்கிய தொலைக்காட்சி இப்போது கடைசியாக விஷாலின் படமொன்றை வாங்கி அசலுடன் போட்டிக்கு இறக்க திட்டமிட்டுள்ளதாக பேச்சு,என்னதான் விளம்பரம் செய்தாலும் ஒரு படத்தின் ஒபநின்கை அதிகரிக்க முடியுமேயன்றி படத்தின் தலைவிதியை மாற்றியமைக்க முடியாது.அயன் தவிர இவர்கள் வாங்கி வெளியிட்ட எல்லாப் படமும் இரண்டாம் வாரத்துடன் குப்புற விழுந்தது இதற்கு சான்று.ஆனாலும் கிங் ஒப் ஒபெநிங்(King Of Opening ) அஜித்திற்கு முன் இவர்களின் விளம்பரம் எவ்வளவு கை கொடுக்கும் என்று தெரியவில்லை,அதன் பின் இவ்விரண்டு படங்களின் தரத்தை பொறுத்தது இவற்றின் வெற்றி.

இதனைத் தான் அசல் ஆடியோ ரிலிசிலும் அஜித் கூறியிருந்தார் "நல்ல படைப்புகளுக்கு விளம்பரம் அவசியம் இல்லை" என்று .ஆனால் மறுநாள் ஒரு இணையத்தளத்தில் செய்தி வந்திருந்தது."என் படங்களுக்கு விளம்பரம் அவசியம் இல்லை " என்று.இப்படித்தான் அஜித் கூறும் அனைத்துக்கும் வேறு அர்த்தம் கற்பிக்கப்படுகிறது.

இதே போன்றே அண்மையில் தனது பெயருக்கு முன்னால் வரும் பட்டப்பெயரை (அல்டிமேர் ஸ்டார் ) போடவேண்டாம் என்று அஜித் கூறியதை ஒரு முக்கிய சினிமா இணையத்தளம் "அஜித் ஜோதிடரின் பேச்சை கேட்டே இவ்வாறு கூறியுள்ளார்" என்றும்,முன்பு அஜித் பட்டப்பெயர் போடாத காலங்களில் அதிக வெற்றி கிடைத்ததால் மீண்டும் பட்டப்பெயரை போடாமல் விடப்போகின்றார் என்றும் பிளேற்ரை மாற்றிப்போட்டன. நம் தலைவலி ரசிக சிகாமணிகளுக்கு இது போதாதா? உடனே சித்து வேலையே ஆரம்பித்து விட்டார்கள். இவர்களிடமிருக்கும் கெட்டபழக்கம் என்னவென்றால் தமது தலைவனுக்கு நல்லபுத்தி வரவேண்டும் என்று நினைப்பதில்லை அதற்க்கு மாறாக மற்றவர்களுக்கு வரும் நல்லபுத்தியையும் சாக்கடை ஆக்குவதுதான் இவர்களது வேலை , இவர்கள் தலைவன்தான் சாக்கடை முன்னாலே சத்தமாக பேசுபவராச்சே...

எது எப்படியோ மனதில் பட்டதை கூறிவிட்டு,நடிப்பு என்பதை தொழிலாகமட்டும் பார்த்துக் கொண்டிருக்கும் 'தலை'க்கு ஒரு சல்யுட்...

ஆயுர்வேத சிகிச்சை நயன்தாரா முடிவு


அசைஞ்சா தேரு, ஆடினா அலைகடல்னு அழகா இருந்த நயன்தாராவுக்கு இப்போது கண்ணாடி பார்த்தாலே கவலையாக இருக்கிறதாம். (அவருக்கு மட்டுமா?)

கொஞ்சம் புஷ்டியானால் அழகு கூடுமே என்றார்களாம் கூடவே இருக்கிற தோழிகளும், தோழர்களும். ஆனால், அதையெல்லாம் அந்த நேரத்தில் பிடிவாதமாக மறுத்து வந்த நயன் திடீரென்று வேறொரு முடிவுக்கு வந்திருக்கிறாராம்.

தன் கைவசம் இருக்கிற படங்களை முடித்துவிட்டு சுமார் ஒரு மாதம் லாங் லீவ் எடுக்கப் போகிறாராம். இந்த நேரத்தில் கேரள ஆயுர்வேத சிகிச்சை செய்து உடலையும் மனசையும் முன்பு போல பாலீஷ் ஆக்கிக் கொள்வது என்பதுதான் நயன்தாராவின் திட்டம்.

அரை செஞ்சுரியை எட்டிய, அல்லது தாண்டிய ஹீரோக்கள் எல்லாருமே இந்த ஆயுர்வேத முகாம்களில்தான் தஞ்சமடைகிறார்கள். இதையெல்லாம் நன்றாக கேள்விப்பட்டும் இத்தனை காலம் அதில் அக்கறை காட்டாத நயன்தாரா இப்போது சம்மதிக்க என்ன காரணம்? மனம் கவர்ந்தவரின் விருப்பமும் அதுவாக இருப்பதால்தானாம். “கவலையிலேயே உன் முகம் மாறிடுச்சு. உடம்பை பார்த்துக்கோ” என்றாராம் அக்கறையாக.

பார்க்கிறவரு சொன்னா, கேட்கிறவரு கேட்டுதானே ஆகணும்?


நிறைவேறுமா இளையராஜாவின் கோரிக்கை


இசைஞானி இளையராஜா பொதுவாக அரசிடம் கோரிக்கை எதுவும் வைக்காதவர். அறப்பணி உதவிகளென்றால் கூட தானே தன் சொந்த பணத்தில் செய்துவிடுபவர்.

ஆனால், அவர் அரசுக்கு வைத்த ஒர் கோரிக்கை, இசைக்கென்று தனி பல்கலைக்கழகம் வேண்டும் என்பதுதான்.

தனது இந்தக் கோரிக்கை விரைவில் நிறைவேறும் என்ற நம்பிக்கை இருப்பதாக தெரிவித்தார் இளையராஜா.

சென்னை எம்ஓபி வைஷ்ணவா கல்லூரில் நேற்று மாணவிகள் நடத்திய பொங்கல் திருவிழாவுக்கு சிறப்பு விருந்தினராக வந்தார் இசைஞானி. அப்போது நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியிலும் பங்கேற்றார்.

இந்த நிகழ்ச்சிக்கு தனது ஆர்மோனியத்தையும் எடுத்து வந்தார் ராஜா.

மாணவிகள் மற்றும் கல்லூரி ஆசிரியர்கள் ஆர்வமுடன் கேட்ட கேள்விகளுக்கு அதே உற்சாகத்துடன் அவர் பதிலளித்தார்.

அவர் கூறியதிலிருந்து...

இசையும் காற்றைப் போலத்தான்.​ எப்போதும் நம்முடன் கலந்திருக்கிறது. காற்றை காற்றிலிருந்து பிரிக்க முடியுமா? 1968ம் ஆண்டு சென்னை வந்ததிலிருந்து இன்று வரை நெருங்கிய நண்பன் என யாரும் இல்லை. ஆர்மோனியப் பெட்டிதான் என் நெருங்கிய, உயிர் நண்பன். இந்தப் பெட்டியோடுதான் நான் பேசி வருகிறேன்.

எப்பொழுதும் ஆர்மோனியப் பெட்டிதான் என் கூடவே வருகிறது.​ 'பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்...' என்ற பாடல் வரி கிடைக்க அதற்கு உருவம் கிடைத்த நேரம் அதிகாலை 3 மணி.

தன் 16 வயதில் அனைத்தையும் துறந்து, யாரும் இல்லாமல் வேறு உலகத்துக்கு போனவர். அனைத்தையும் துறந்து, 'தண்ணீரில் இறங்கி குளிக்கும் போது எந்த தண்ணீர் வந்து இந்த உடலை சுத்தப்படுத்தி விடப்போகிறது. இந்த உடலுக்கு குலம், ஜாதி என என்ன இருக்கிறது' என நினைத்தவர். ரிஷிதான் என்னைப் பிடித்து இயங்க வைக்கிறார். உடலில் இருக்கும் ஒவ்வொரு புலன்களுக்கும் இன்பம் இருக்கிறது. அறிவின் இன்பம் எது என்பதை அறிந்தவர் ரமண மகரிஷி.

'அன்னக்கிளி'யின் பாடல்கள் ஹிட்டாகும் என எனக்குத் தெரியாது. அதற்கு இறைவன்தான் காரணம்.

இன்றைக்கு பாடல் கேட்டு வருபவர்கள், 'அந்த படத்தில் வந்தது மாதிரி... இந்த பாடல் வேண்டும்' என்று குறிப்பிட்டுதான் கேட்கிறார்கள். 'புதுமையாக வேண்டும்' என யாரும் கேட்பதில்லை. 877 படங்கள் முடித்தாகி விட்டது. இப்போது எந்த இயக்குனரும் என்னிடம் புதுமையை நோக்கி வரவில்லை.

மதுரை வைகை அணை கட்டுகையில் கூலி வேலை செய்தபோது பாடிய பாடல்களிலிருந்து, தேவாரம் பள்ளியில் பாடியதில்...அண்ணன் பாவலருடன் திருவெறும்பூரில் பாடிய மாநாட்டு பாடல்... என வாழ்க்கையில் ஆயிரம் விஷயங்கள்.

சென்னை வரும் போது சங்கீத பாஷைகள் எதுவும் தெரியாது. இப்போதும் எதுவும் தெரியாது.​ இசையைப் பற்றி தெரியாமல் இருப்பதால்தான் இன்றும் கற்றுக் கொண்டிருக்கிறேன்.

இசை பல்கலைக்கழகம் உருவாகும்...

இந்திய இசையின் உருவம் வேறு. மேற்கத்திய இசையின் உருவம் வேறு. உலகத்தில் காலம்தான் பிரமாண்டமானது என சொல்லுவேன். ஒரு நொடியையும், மற்றொரு நொடியையும் பிரிக்க முடியாத அளவு காலம்தான் சேர்த்து வைக்கிறது.

சில குறிப்பிட்ட இசைகளால் எல்லாம் முடிந்து விட்டதாக அர்த்தமில்லை.

சில காலக் கட்டங்களில் உலக இசை மேதைகளை பற்றி தெரிந்துகொள்ள அவர்கள் வாழ்ந்த இடங்களுக்கு சென்றிருக்கிறேன். சுற்றிப் பார்த்திருக்கிறேன். இசை மேதை பீத்தோவனின் பியானோவை தொட்டுப் பார்த்திருக்கிறேன். அவர்கள் அந்த அளவு பாதுகாத்து வைத்திருக்கிறார்கள்.

ஆனால் நம் முன்னோர்களின் இசைக் கருவிகள் எங்கே போயின? இது பற்றி முதல்வரிடமும் பேசியிருக்கிறேன். இசைப் பல்கலைக்கழகம் பற்றியும் பேசியிருக்கிறோம். அந்த அமைப்பு உருவாகும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

இளைஞர்களுக்கு என்னிடமிருப்பதைதக் தரவே விரும்புகிறேன். இருப்பதைத் தந்து விட்டுப் போக வேண்டும் என்பதே என் விருப்பம் என்றார் இளையராஜா.


நடிகரான ஆஸ்கர் நாயகன்

ஒரு இசை விழாவுக்காக போக்குவரத்து நெரிசல் ஏற்படும், எனவே காரில் யாரும் வரவேண்டாம் என்று கூறியிருக்கிறது சிட்னி நகர காவல்துறை.

அந்த நிகழ்ச்சியை நடத்தப் போகிறவர் வேறுயாருமல்ல நம் ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர். ரஹ்மான்தான். இந்த இசை நிகழ்ச்சியைக்கான கிட்டத்தட்ட லட்சக்கணக்கில் டிக்கெட் விற்றிருக்கிறதாம்.

மேலும் ஆஸ்திரேலியப் பாடகர் மார்ட்டன் என்பவர் இயக்கும் இசை பற்றி டாக்குமெண்ட்ரி படத்தில் ஏ.ஆர். ரஹ்மானும் நடிக்க இருக்கிறார். பெரும்பாலும் எந்தப் படத்திலும் நடிக்க ஆர்வம் காட்டாதவர்.

ஆனால் இசை சம்பந்தப்பட்ட படம் என்பதாலும், மார்ட்டன் நல்ல நண்பர் என்பதாலும் ஒப்புக்கொண்டேன் என்கிறார் ஆஸ்கர் நாயகன்.

இதனால் இங்குள்ள தமிழ் இயக்குனர்களும் ஏதாவது ஒரு காட்சியில் நடிக்கவைக்க கேட்கலாமா என யோசித்து வருகின்றனர்.


பூர்ணாவின் புதிய ஏற்பாடு புல்லரிக்கும் தமிழ்சினிமா


ஏழைகளின் ஐஸ்வர்யாராய் என்று பாராட்டு பெறுகிற அளவுக்கு ஐஸ்சின் சாயலில் இருப்பவர் ரியாசென். தாஜ்மஹால் படத்தில் மனோஜுடன் அறிமுகமானது ரசிகர்களுக்கு நினைவிருக்கலாம்.

ஏழைகளை தவிக்க விட்டுவிட்டு அவர் இந்திக்கு போய்விட்டார். அவரைப் போலவே இன்னொரு ஏழைகளின் அசின் நம்ம பூர்ணா.

அசின் கால்ஷீட்டுக்கு ஏங்கும் புது இயக்குனர்கள் கூட, பூர்ணாவை எளிதில் அணுக முடிகிறது. அதனாலேயே வரிசையாக படங்கள் வந்து குவிகிறது பூர்ணாவுக்கும். தனது கவர்ச்சி கொள்கையில் கொஞ்சம் திருத்தம் கொண்டு வந்திருக்கிறாராம். லேசாக கவர்ச்சி காட்டிக் கொள்ளலாம், தப்பில்லை என்ற அவரது புதிய ஏற்பாடு கோலிவுட்டில் கொண்டாட்டத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

கதை ஹீரோ ஷான் குமாருடன், அவர் புதிதாக நடிக்கும் கொலை தொழில் படத்தின் புகைப்பட செஷனுக்காக சென்னை வந்திருந்தார் பூர்ணா. இருவரையும் நெருக்கமாக நடிக்க வைக்க நினைத்த பெண் இயக்குனர் விஜய பத்மா, பூர்ணாவிடம் “இன்னும் கொஞ்சம் நெருக்கமா... இன்னும் கொஞ்சம் இறுக்கமா...” என்று சொல்ல சொல்ல அத்தனைக்கும் கீழ் படிந்தார் பூர்ணா. கவர்ச்சி விஷயத்தில் இயக்குனர் எதிர்பார்த்ததை விட தாராளமாக இருந்தாராம். இந்த புது பூர்ணாவை பார்த்தவர்கள் “பொண்ணு பொழச்சுக்கும்” என்று அதிரி புதிரியாக சர்டிபிகேட் கொடுக்கிறார்கள்.


ஜில் நீச்சலுடையில் விமலா ராமன்


ஜில் நீச்சலுடையில் விமலா ராமன்!


இந்த நிலையில் தெலுங்குப் படவுலகம் பக்கம் போனவருக்கு, அவரது ‘பேமிலி’ இமேஜே எதிரியாக மாற, லேசான கவர்ச்சி காட்டி ஆல்பம் தயாரித்து அனுப்பி வைத்தார்.தமிழில் அவர் நடித்ததெல்லாம் குடும்பப் பாங்கான வேடங்களே. அதுவும் கூட பெரிதாகக் கை கொடுக்கவில்லை.

கைமேல் பலன் கிடைத்தது. லவர் பாய் என்ற படத்தில் தருணுக்கு ஜோடியாய் நடிக்கிறார். இந்தப் படத்தை இப்போது ‘சக்குலன்டி அம்மாயி சக்கனைனா அப்பாயி’ என்று பெயர் மாற்றி எடுத்து வருகிறார்கள்.

இதில் சில காட்சிகளில் நீச்சலுடையில் நடிச்சே தீரணும் என இயக்குநரும் தயாரிப்பாளரும் ஒற்றைக் காலில் நிற்க, ஸ்விம் சூட்டுக்கு மேல் ஒரு மெல்லிய கோட் போட்டுக் கொண்டு நடித்துக் காட்டினாராம். ஸ்டில்களைப் பார்த்தவர்களுக்கு ஒரு கிக்கே வரவில்லையாம்.

அட என்ன இது… நீச்சல் உடை காட்சி என்றால் சும்மா ஜிவ்வுன்னு இருக்க வேணாமா… இது ஜவ்வா இருக்கே என கமெண்ட் அடித்தாராம் தயாரிப்பாளர்.

முழுக்க நனைந்த பிறகு முக்காடு எதற்கு என நினைத்துவிட்டார் போலிருக்கிறது விமலா ராமன்பார்த்தார் விமலா… இனி சாண் என்ன முழமென்ன என்ற முடிவோடு கோட்டைக் கடாசிவிட்டு குளத்தில் முங்கி எழுந்தாராம்….

தயாரிப்பாளர் செம ஜிவ்வாகி மயக்கமே போட்டு விட்டாராம்…!


இடைக்காலத் தடை… பொங்கலுக்கு வருமா ஆயிரத்தில் ஒருவன்


இடைக்காலத் தடை… பொங்கலுக்கு வருமா ஆயிரத்தில் ஒருவன்?


சென்னை சிட்டி சிவில் கோர்ட்டில் சந்திரசேகரன் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், “சினிமா இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் ‘காசிமேடு’ என்ற தமிழ் படத்தை தயாரிக்க முடிவு செய்தேன்.மிகுந்த சிக்கல்களைச் சந்தித்து, ஒருவழியாக பொங்கலுக்கு ரிலீஸாகவிருந்த ஆயிரத்தில் ஒருவன் படத்தை வெளியிட இடைக்காலத் தடை வாங்கியுள்ளார் சேலம் சந்திரசேகரன் என்ற தயாரிப்பாளர்.

இதற்காக எங்கள் 2 பேருக்கும் இடையே 27.10.04 அன்று ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த படத்தின் உரிமையை பெறுவதற்காக ரூ.2 கோடி தருவதாக செல்வராகவனிடம் நான் சம்மதித்து இருந்தேன்.

பின்னர் ரூ.90 லட்சம் தொகையை 2004-ம் ஆண்டு அக்டோபரில் இருந்து 2005-ம் ஆண்டு மே மாதம் வரை 5 தவணைகளில் வழங்கினேன். இந்த நிலையில் கஜினி என்ற வெற்றிப் படத்தையும் தயாரித்தேன்.

காசிமேடு படத்தை இயக்கும் ஒப்பந்தத்தை செயல்படுத்தாமல் என்னை செல்வராகவன் ஏமாற்றி வந்தார். புதுப்பேட்டை படத்தில் ‘பிசி’யாக இருப்பதாகக் காரணம் கூறி என்னை புறக்கணித்தார்.

இந்த நிலையில் டிரீம்வேலி கார்பரேஷன் நிறுவனத்தின் உரிமையாளர் ஆர்.ரவீந்திரனுடன் செல்வராகவன் ஒப்பந்தம் செய்துகொண்டு ஆயிரத்தில் ஒருவன் என்ற சினிமாவை தயாரிக்கும் வேலையில் இறங்கினார்.

இது எனக்குத் தெரியாது. எனது அனுமதியையும் செல்வராகவன் பெறவில்லை. எனவே காசிமேடு படத்தை தயாரிக்க வேண்டும், இல்லாவிட்டால் எனது பணத்தைத் திருப்பித் தரவேண்டும் என்று கூறினேன்.

என்னுடன் செல்வராகவன் ஒப்பந்தம் செய்திருக்கும் போது, அவரை ரவீந்திரன் எப்படி மற்றொரு ஒப்பந்தத்தில் சேர்க்க முடியும்? என்று தமிழ்ப் பட தயாரிப்பாளர் கவுன்சிலில் பிரச்சினையைக் கொண்டு வந்தேன்.

அவர்கள் விசாரித்து, 2006-ம் ஆண்டு ஜுன் மாதத்துக்குள் ரூ.2 கோடியை எனக்கு அவர்கள் கொடுக்க வேண்டும் என்று கூறினர். நான் கடனாக வாங்கிய ரூ.50 லட்சம், பைனான்சியர் ரமேஷ்பாபுவிடம் ‘அட்ஜஸ்ட்’ செய்யப்பட்டது. மீதி ரூ.1.10 கோடியை தந்திருக்க வேண்டும்.

செல்வராகவனும், ரவீந்திரனும் எனக்கு முதலில் ரூ.10 லட்சமும், பின்னர் ரூ.30 லட்சமும் (2007-ம் ஆண்டு) கொடுத்தனர். மீதமுள்ள தொகை ரூ.1.10 கோடியை ஆயிரத்தில் ஒருவன் படம் வெளியிடும் போது தருவதாகக் கூறினர். இரண்டரை ஆண்டுகள் தயாரிக்கப்பட்ட அந்தப் படம் தற்போது பொங்கலன்று வெளியிடப்பட உள்ளது.

எனவே மீதத் தொகையை தரும்படி கேட்டேன். ஆனால் ஏதோ காரணத்தைக் கூறி மீண்டும் ஏமாற்றிவிட்டு, படத்தை வெளியிடத் திட்டமிட்டு உள்ளனர். அவர்கள் படத்தை ரிலீஸ் செய்தால் எனக்கு பணம் வராமல் போய், பெருத்த நஷ்டம் ஏற்படும். எனவே ரவீந்திரன் தயாரித்த ஆயிரத்தில் ஒருவன் படத்தை திரையிட தடை விதிக்க வேண்டும்”, என்றார்.

இந்த மனுவை 2-வது சிட்டி சிவில் கோர்ட்டு நீதிபதி விசாரித்தார். ஆயிரத்தில் ஒருவன் படத்தை 20-ந் தேதி வரை திரையிட இடைக்காலத் தடை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

இந்தப் படம் வரும் 14-ம் தேதி உலகெங்கும் ரிலீஸ் என தியேட்டர் விவரங்களுடன் விளம்பரங்கள் வெளியாகியுள்ள நிலையில், சந்திரசேகரனின் இந்த வழக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. இதன்மூலம் ஆயிரத்தில் ஒருவன் தயாரிப்பாளர் கடும் சிக்கலுக்கு உள்ளாகியுள்ளார்.