Monday, January 25, 2010

கோவாவில் சினேகா பிகினி டிரஸ்ஸில் இல்லை

கோவாவில் சினேகா பிகினி டிரஸ்ஸில்  இல்லை!

கோவா படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பைப் படம் ரிலீஸ் ஆகப்போகும் கடைசி நேரத்தில் வைத்திருந்தார்கள். தயாரிப்பாளர் சவுந்தர்யா மட்டும் வரவில்லை. வந்தால் எல்லாரும் திருமணம் பற்றியே பேசுவார்கள். அது கோவா பிரஸ் மீட்டாக இருக்காது என்பதால் வரவில்லையாம்.

அப்படியிருந்தும் கோவாவைத் தாண்டிச் சில கேள்விகள். அதற்கும் வழக்கம் போல கலகலப்பாகப் பதில் சொல்லிக்கொண்டிருந்தார் வெங்கட் பிரபு. கரகாட்டக்காரனை நீங்க ரீமேக் பண்ணப் போறதா சொல்றாங்களே? “அப்படியா… நல்லாயிருக்கே. ஆனால் அதில யாரை நடிக்க வைக்கலாம்னு தெரியலையே? வேணும்னா பிரேம்ஜிய நடிக்க வைக்கலாம். ராமராஜன் சார் மாதிரி அவரு கரகம் ஆடினா நல்லாதான் இருக்கும்” என்று சொல்லி நிருபரை ஸ்தம்பிக்க வைத்தார் வெங்கட்பிரபு.

படத்திற்கு ஏ சர்டிபிகேட் கொடுத்துவிட்டார்கள் என்பதை கொஞ்சம் வருத்தத்தோடு பகிர்ந்து கொண்டவர், “ஃபாரின்லே 18 வயசுக்கு கீழே இருக்கிறவங்க பெற்றவர்கள் துணையுடன் பார்க்கலாம்னு ஒரு கிளாஸ் இருக்கு. இங்கே அது இல்லை. என்ன செய்யுறது? இது ஜாலியான படம். வேறொண்ணும் சொல்றதுக்கு இல்லை” என்றார்.

கோவா படத்தில் சினேகா பிகினி டிரஸ்ஸில் நடிச்சிருக்காங்க என்றொரு தகவல் காட்டுத் தீயாகப் பரவிக்கொண்டிருக்கிறது. அடுத்த வாரத்தில் படம் ரிலீஸ். இப்போதாவது இந்த விடுகதைக்கு விடை சொல்வார்களா? ஆவலோடு எதிர்பார்த்த அந்த விஷயத்தையும் போட்டு உடைத்தார் வெங்கட்பிரபு.

ஒரு முன்னணி பத்திரிகையில் அவங்க பிகினி டிரஸ்சில் நிற்கிற மாதிரி ஒரு ஸ்டில் வந்திச்சு. அது மார்பிங். அப்படியெல்லாம் இந்த படத்திலே நடிக்கலை. தெளிவாகவே எழுதிடுங்க என்றார். பக்கத்திலிருந்த சினேகா, வெங்கட் பிரபுவைக் கையெடுத்துக் கும்பிட்டார் நன்றியோடு.

படத்தில் இவர்தான் அப்படி டிரஸ் அணியவில்லையே தவிர, முக்காலே முழு சதவீதம் டூ பீஸ் டிரஸ்சில்தான் பெண்கள் அலைகிறார்களாம் படம் நெடுகிலும். காட்சிகளிலும் அங்கங்கே பலமான அக்கிரமங்கள் அரங்கேறியிருக்கிறதாம். இது ப்ளஸ்ஸா, மைனஸா என்று புரியாமல் தடுமாறிக்கொண்டிருக்கிறதாம் கோவா டீம்.

இதுவரைக்கும் ஓ.கே. அதன்பின் வந்த கேள்விகள்தான் ஏடாகூடம். ரஜினி தன்னோட பொண்ணு சவுந்தர்யாவுக்கு 75 கோடி ரூபாய் சொத்து எழுதி வச்சிருக்கறதாகவும், அந்த தைரியத்தில்தான் பட்ஜெட்டை கன்னாபின்னான்னு ஏத்திட்டீங்கன்னும் ஒரு பேச்சு இருக்கே? பதறிப்போன வெங்கட், அவங்க சொத்து பிரச்சனையெல்லாம் நமக்கு எதுக்கு சார்? அப்படி பார்த்தா நான் எதுக்கு இந்த பசங்களை வச்சு எடுக்கணும்? பேசாம விஜய் அஜீத்துன்னு போயிருப்பேனே என்றார்.

படத்தை பார்த்திட்டு இம்ப்ரஸ் ஆன யுவன், எக்ஸ்ட்ரா இரண்டு பாடல்கள் போட்டு கொடுத்திருக்கிறாராம். ஆஹா…


இந்தியாவில் ரூ.100 கோடியைத் தாண்டி “அவதார்”

இந்தியாவில் ரூ.100 கோடியைத் தாண்டி “அவதார்”

ஹாலிவுட் திரைப்படம் “அவதார்” வசூல், இந்தியாவில் ரூ.100 கோடியைத் தாண்டியுள்ளது. அந்தப் படத்தை இங்கு திரையிட்டுள்ள பாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோஸ் நிறுவனம் இதைத் தெரிவித்துள்ளது. இதுபற்றி அந்நிறுவன தலைமைச் செயல் அதிகாரி விஜய் சிங் கூறியதாவது:

இந்தியாவில் “அவதார்” இதுவரை ரூ.101 கோடி வசூலித்துள்ளது. அமீர்கானில் “3 இடியட்ஸ்” படத்துக்கு அடுத்தததாக இந்தப் படம் ஆதரவை பெற்றுள்ளது. 3டி தொழில்நுட்பம் ரிலீஸ் மற்றும் அது இல்லாத பிரின்ட் வெளியான தியேட்டர்களிலும் சமமான வசூல் கிடைத்துள்ளது.
ஆங்கில பிரின்ட்கள் ரூ.50.5 கோடி வசூலித்தன.

இந்தியில் ரூ.26 கோடி கிடைத்தது. தமிழ், தெலுங்கு மொழி பிரின்ட்கள் ரூ.24 கோடி வசூல் அளித்தன.

உலகம் முழுவதும் இந்த படம் டிசம்பர் 18ல் வெளியானது. ஒரு மாதத்தில் சுமார் ரூ.6,000 கோடி வசூலை குவித்துள்ளது என்றார். நவீன தொழில்நுட்பத்தில் “அவதார்” படம் ரூ.1,200 கோடி செலவில் தயாரிக்கப்பட்டது.

வெளியான ஒரே மாதத்தில் 5 மடங்கு அதிக லாபத்தை அள்ளித் தந்துள்ளது. அமீர்கானின் “3 இடியட்ஸ்” படம் சர்வதேச அளவில் வெளியான 19 நாளில் ரூ.315 கோடி வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது





விஜய்யுடன் நடிக்க ஆசை.. ரீமாசென்

விஜய்யுடன் நடிக்க ஆசை.. ரீமாசென்


நடிகர் விஷால் சில மாதங்களுக்கு முன்பு ஒரு நடிகையை காதலிப்பதாக பரபரப்பான பேட்டி அளித்தார். ஆனால் நடிகை பெயரை வெளியிட மறுத்து விட்டார். அந்த நடிகை யார் என்று திரையுலக வட்டாரம் தலையை பிய்த்தது.
பிறகு நடிகை ரீமாசென் என்று தெரிவித்து வந்தனர்.
விஷாலும் ரீமாசென்னும் “செல்லமே” படத்தில் இணைந்து நடித்தனர். “திமிரு” படத்திலும் ஜோடியாக நடித்தார்கள்.
அப்போது தான் காதல் மலர்ந்ததாக கூறப்பட்டது. இந்த காதல் விவகாரம் பற்றி நீண்ட நாட்களுக்கு பிறகு ரீமாசென் கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது:-

விஷாலையும் என்னையும் இணைத்து செய்திகள் வெளியாகி உள்ளன. அப்படி காதல் எதுவும் இல்லை. அது வெறும் கிசுகிசுதான்.

எனக்கு திருமணம் எப்போது நடக்க வேண்டுமோ அப்போது நடக்கும். எனக்கு பொருத்த மானவரை இன்னும் சந்திக்கவில்லை என்றார்.

மேலும் அவர் கூறியதாவது:-

“ஆயிரத்தில் ஒருவன்” படத்தில் சிறப்பாக நடித்து இருப்பதாக பாராட்டுகள் குவிகின்றன. மகிழ்ச்சியாக இருக்கிறது. தமிழ் நடிகர்களில் விஜய்யை பிடிக்கும். அவருடன் நடிக்க ஆசைப்படுகிறேன்.

“ஆயிரத்தில் ஒருவன்” படத்தில் நடித்தது மறக்க முடியாத அனுபவம். பார்த்திபனுடன் காதல் செய்யும் காட்சிகளில் விழுந்து விழுந்து சிரித்தேன். பரதநாட்டியம் ஆடியது கஷ்டமாக இருந்தது.

சிம்புவுடன் வல்லவன் படத்தில் நடித்தது இனிய அனுபவம். ஆனால் அதில் சைக்கோ ரக பெண்ணாக வந்தது பிடிக்கவில்லை. அப்படி நடித்தது நான் செய்த பெரிய தவறு.


Sunday, January 24, 2010

நாணயம் – திரைவிமர்சனம்


நடிப்பு: பிரசன்னா , சிபிராஜ் , ரம்யா
இசை: ஜேம்ஸ் வசந்தன்
தயாரிப்பு : எஸ்.பி.பி சரண
இயக்கம் : சக்தி கே ராஜன்
2008 – ஆம் ஆண்டு வெளியான ”த பாங்க் ஜொப் ” என்ற ஆங்கில படத்தின் ரீமேக் தான் இந்த நாணயம். படத்தின் நாயகன் பிரசன்னா ஒரு பட்டதாரி , முதலாளி ஆகவேண்டும் என்ற ஆசையில் இருக்கிறார் ஒருசமயத்தில் பேங்க் முதலாளியான எஸ்பிபிக்கு உதவ எஸ்பிபியும் பதிலுக்க்கு அவர் பேங்கில் ஒரு வேலையும் போட்டு கொடுக்கிறார். ஆங்கில படத்தில் வருவது போன்று பேங்க் லாக்கரை பாதுகாக்க புது வழி ஒன்றை கண்டுபிடிக்கிறார் அதை தன் பேங்க் கிளையில் செயல்படுத்தியும் பார்க்கிறார்.வில்லனாக சிபிராஜ் தன்பங்கை சரியாக செய்துள்ளார்.படத்தின் நாயகன் பிரசன்னாவுக்கும் சிபிக்கும் நடக்கும் பிரச்சினைகளே இந்த படத்தின் கதை.
பட்டதாரியும் பேங்க் அதிகாரியாகவும் பிரசன்னா நடிப்பில் தன் திறமையை காட்டியுள்ளார். இந்த படத்தில் வில்லனாகும் சிபி வில்லனுக்கென்று ஒரு புது இமெஜ்-ஐ உருவாக்கியுள்ளார். படத்தின் நாயகி ரம்யா புதுமுகம் தான் ஆனால் சில காட்சிகளில் அவரின் நடிப்பு இயல்பாக தெரிகிறது. பேங்க் பொருத்தமாக தான் இருக்கிறது ஆனால் இது போன்று பதிதாக கண்டுபிடிப்பதை அனுமதிப்பார்களா என்றால் கொஞ்சம் ஒவராத் தான் இருக்கு. வில்லன் கும்பல் பேங்க் பணத்தை கொள்ளைஅடிக்கதான் இவ்வளவு போராடுகிறது என்று கிளைமாக்ஸ்சை பார்த்தால் நமக்கு படத்தின் முடிவு கொஞ்சம் வித்தியாசமாகத்தான் இருக்கிறது. இசையில் ஜேம்ஸ் வசந்தனிடம் நாம் சுப்பிரமணியபுரம் போல் நிறைய எதிர்பார்த்தோம் ஆனால் ”நான் போகிறேன்…” ஒரு பாடல் மட்டும் தான் மனதில் நிற்கிறது மற்ற பாடல்கள் பரவாயில்லை. ஒளிப்பதிவாளர் ஓம்பிரகாஷ் அழகாக படம் பிடித்து காட்டியுள்ளார். மிகப்பெரிய அள்வில் ஓம்பிரகாஷ் வருவார் என்பதற்கு இந்த படம் ஒரு உதாரணம். குடும்பத்தோடு பார்க்கலாம் மொத்தத்தில் நாணயம் மதிப்பு குறைவாக உள்ள பணம்.















குட்டி திரை விமர்சனம்





நடிப்பு: தனுஸ், ஸ்ரேயா , மேக்னா நாயுடு ,வின்சென்டஇசை: தேவி ஸ்ரீ பிரசாத்.ஒளிப்பதிவு: பாலுஇயக்கம் : மித்ரன் ஆர். ஜவஹர்
ஆரியா என்ற தெலுங்கு படத்தின் ரீமேக்கு தான் இந்த குட்டி. கல்லூரி மாணவி ஸ்ரேயாயைவை காதலிக்கும் MP மகன் வின்சென்ட்,கல்லூரிக்குபுதிதாக சேரும் மாணவர் தனுஸ் இருவரும் ஸ்ரேயாவை காதலிக்கின்றனர் இறுதியாக ஸ்ரேயா யாரைத் திருமணம் செய்து கொள்கிறார்என்பது தான படத்தின் கதை.
தனுஸ் நடிப்பில் முதிர்ச்சியுடன் காமெடியும் தெரிகிறது. கல்லூரி மாணவியாக ஸ்ரேயா அழகாகத் தெரிகிறார். வின்சென்ட் ஸ்ரேயாவிடம்நீ காதலிக்க மறுத்தால் தற்கொலை என்று மிரட்ட ஸ்ரேயாவும் ஐ லவ் யு சொல்கிறார். தனுஸால் ஒவ்வொரு விதத்திலும் வின்செண்ட் அப்செட்ஆவது சூப்பர். முதல் பாதி முழுக்க திரைக்கதையில் வேகம் அடுத்த பாதி வேகம் குறைவு. தனுஸ் அடிக்கடி செய்யும் அவருக்கெ உரிய காமெடிகலக்கல்.வின்சென்ட் முன் ஸ்ரேயாவிடம் தனுஸ் தன் காதலை தெரியப்படுத்தும் காட்சி திரையில் அருமை. இயக்குநர் ஜவஹர் ஏற்கனவே தனுஸசைவைத்து யாரடி நீ மோகினி படத்தை இயக்கியதால் தனுஸின் அத்தனை திறமையையும் சரியாக பயன்படுத்தியுள்ளார். ஸ்ரேயாவின் தோழியாகமேக்னா நாயுடு பொருத்தமான தோழியாக வலம் வந்திருக்கிறார்.
இசையில் தேவி பிரசாத் ”யாரோ என நெஞ்சை..” பாடல் மட்டும் நன்றாக இருக்கிறது மற்றவை பரவாயில்லை அதோடு ஏற்கனவே கேட்ட மெட்டில் தான்பாடல்கள் உள்ளது. கல்லூரியை அழகாக படம் பிடித்து நம் கண்ணுக்கு விருந்தளித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் பாலு, ஆர்த்தி மயில்சாமி கொடுத்தவேலையை சரியாக செய்துள்ளனர். மொத்தத்தில் இந்த குட்டி ஒரு கல்லூரி ”மான் குட்டி “.

ஆயிரத்தில் ஒருவன்


பல எதிர்பார்ப்புகளுடன் சில வருடங்கள் கழித்து வெளிவந்திருக்கும் செல்வராகவனின் ” ஆயிரத்தில் ஒருவன் “ – திரை விமர்சனம்.
நடிப்பு: கார்த்தி, ரீமா சென், ஆண்ட்ரியா, பார்த்திபன்இசை: ஜிவி.பிரகாஷ்.ஒளிப்பதிவு:ராம்ஜி
சோழர்கள் பாண்டியரின் சிலையையும் பொக்கிஷத்தையும் திருடிச்செல்கின்றனர். இதை மீட்க அரசு நிர்ணயிக்கும் குழுவில் ரீமா , ஆண்ட்ரியா , அழகம் பெருமாள். இவர்களுக்கு உதவி செய்ய படத்தின் நாயகன் கார்த்தி. இந்த குழு பாண்டியரின் சிலையையும் பொக்கிஷத்தை மீட்க படும் போராட்டமே திரைக்கதை. அரசர்காலம், தீவு, ஆபத்து, காட்டுவாசி , வாள், பாம்பு , பாதளம், என்ற ஒரு புதிய வழியில் பயணித்திருக்கிறார் செல்வா, கார்த்தி நடிப்பு படத்திற்கு உண்மையான பலம். சோழர்காலம் பாண்டிய மன்னரின் காலம் நம் எதிர்பார்ப்பிற்கு கொஞ்சம் குறைவாகத்தான் இருக்கிறது. இந்த மாதிரி படத்திற்கு செட் எவ்வளவு முக்கியம் என்று கண்டிப்பாக இயக்குனர்களுக்கு தெரிந்து இருக்க வேண்டும்.
முதல் பாதி வரை படம் விறுவிறுப்பாக தான் செல்கிறது. ஒளிப்பதிவு இன்னும் அந்த காலத்திற்கு நம்மை கூட்டி செல்லவில்லை. ஒருவேளை நாம் பார்த்த அவதார் திரைப்படத்தினால் நம் கண்கள் எதிர்பார்ப்பு சில காட்சிகளில் மட்டும் மகிழ்விக்கிறது. சோழ மன்னனாக பார்திபன் கச்சிதம். பார்திபபின் காட்சிகளில் கொஞ்சம் வேகம் கூட்டிஇருக்கலாம். இராணுவ அதிகாரி அழகம் பெருமாள் நிஜ அதிகாரி போலவே நடித்துள்ளார். ரீமா , ஆண்ட்ரியா படத்தில் சரியாக பயன்படுத்தப்பட்டு இருக்கிறார்கள். இரண்டாம் பாதி பாதாளத்தில்; வேகம் இல்லை.
இசையில் “உன்மேலே ஆசைதான்” பாடல் தவிர மற்றவை சொல்லும்படி இல்லை. கிராபிக்ஸ் இன்னும் முக்கியத்துவம் கொடுத்திருக்கலாம். சொல்ல வேண்டியதை ஆரம்பத்தில் இருந்து கடைசிவரை மாறாமல் திரைக்கதையுடன் பயணம் செய்கிறார் செல்வா.
மொத்தத்தில் ஆயிரத்தில் ஒருவன் நூற்றில் ஒருவன் தான்.

Thursday, January 14, 2010

திருமணம் எப்போது? சவுந்தர்யா ரஜினி


திருமணம் எப்போது? சவுந்தர்யா ரஜினி

தொழிலதிபர் அஸ்வின் குமார்& ரஜினி மகள் சவுந்தர்யா நிச்சயதார்த¢தம் அடுத்த மாதம் 17ம் தேதி நடக்க உள்ளது.
இதுபற்றி சவுந்தர்யா கூறியதாவது:
கடந்த ஓராண்டாக அஸ்வினை எனக்கு தெரியும். எனது பெற்றோரும் அஸ்வினின் பெற்றோரும் குடும்ப நண்பர்கள். எனது காதலை பற்றி சொன்னதும் அப்பா சம்மதம் தெரிவ¤த்தார். அதனால் இது பெற்றோரால் நிச்சயிக்கப்பட்ட காதல் திருமணம் எனலாம். அஸ்வினை தேர்ந்தெடுத்ததற்காக நான் சந்தோஷப்படுகிறேன். நான் சினிமாவில் இருப்பதால் இதே துறையை சேர்ந்தவரை தேர்ந்தெடுக்கும் விருப்பம் எப்போதும் இருந்ததில்லை. அதே நேரம், எனது பணியை அஸ்வின் மதிக்கிறார். திருமணத்துக்கு பின் நாங்கள் சென்னையில்தான் இருக்கப்போகிறோம்.

அவரது பிசினஸும் இங்கேதான். எனது பட நிறுவன வேலைகளும் இங்கேதான். அதனால் வேறு எங்கே போவது? நிச்சயதார்த்தம் பிப்ரவரி 17&ம் தேதி நடக்கிறது. திருமண தேதி இன்னும் முடிவாகவில்லை. இந்த ஆண்டில்தான் திருமணம் இருக்கும். இப்போதைக¢கு ‘கோவா’ படத்தின் இறுதிகட்ட பணிகளில் பிசியாக இருக்கிறேன். இப்படம் இம்மாத இறுதியில் ரிலீசாகும். இவ்வாறு சவுந்தர்யா கூறினார்.